Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ... உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்வு உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

21 மார்
2018
11:03

திருநெல்வேலி:அயோத்தியில் ஸ்ரீராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின் சார்பில் பிப்.14ல் துவங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரை நேற்று செங்கோட்டை வந்தடைந்தது. மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். ராமராஜ்யத்தை மீண்டும் அமைக்க வேண்டும், ராமஜென்மபூமியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும். கல்வியில் ராமாயணத்தை பாடமாக கொண்டுவர வேண்டும். ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக வியாழக் கிழமையை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். உலக இந்து தினத்தை அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி யாத்திரை நடந்தது. ரதத்துடன் யாத்திரை அமைப்பாளர்களான சுவாமி கிருஷ்ணானந்த சரஸ்வதி, ஸ்ரீசக்தி சாந்த ஆனந்தா மகரிஷி ஆகியோர் பின்தொடர்ந்தனர். நேற்று முன் தினம் இரவில் கேரள மாநிலம் புனலுாரில் ரதம் தங்கியிருந்தது.நேற்று காலை 9:20 மணிக்கு நெல்லை மாவட்ட எல்லையான புளியரைக்கு வந்த ரதத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

மறியல்: ரதத்திற்குஎதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே சில அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் 9:30 மணிக்கு தமிழக எல்லைக்கு வந்த ரதம் 10 கி.மீ., வருவதற்கு 3 மணி நேரம் ஆனது.பகல் 12:30 மணிக்கு செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே வரவேற்பளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு: கேரளாவில் இந்த ரத யாத்திரை சென்றதே பலருக்கு தெரிய வில்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறி சில அமைப்புகள் போராட்டம் அறிவித்ததால் அத்வானி போன்ற ஆளுமை யான தலைவர்கள் யாரும் ரதத்துடன் செல்லாத போதும் ரதயாத்தி ரைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.மதியம் 2:15 மணிக்கு கடையநல்லுார், கிருஷ்ணாபுரத் தில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து 2:40 மணிக்கு புளியங்குடி, 3:05 மணிக்கு வாசுதேவநல்லுார்,3:30 மணிக்கு சிவகிரியை சென்றடைந்தது.

1000 பேர் கைது: முன்னதாக ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு அமைப்பினர் செங்கோட்டை யில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால் நெல்லை மாவட்டத் தில் நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணி முதல் மார்ச் 23ம் தேதி காலை 6:00 மணி வரை 144 போலீஸ் தடை உத்தரவை கலெக்டர் சந்தீப் நந்துாரி அறிவித்தார்.எஸ்.பி., அருண் சக்தி குமார் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கையாக தென்காசியில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்உட்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar