Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் உதவி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக சுற்றுலா மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:21

காலத்தை பொன்னாக மதித்து வாழும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஏப்.21 வரையும், புதன் மே 4 வரையும் நற்பலன் தருவர். ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கும் குரு தொடர்ந்து நற்பலன் வாரி வழங்குவார். சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். மே 3க்கு பிறகு கணவன், மனைவி இடையே  பிரச்னை உண்டாகி மறையும். மே 4,5ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். ஏப்.29,30ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஏப்.14,15, மே 11,12,13 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறும் மாதமாக அமையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். மே 3க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சூரியனால் கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். பணவிஷயத்தில் பிற்போக்கான நிலை உண்டாகாது. ஏப். 18,19,20 ஆகிய நாட்களில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். மே1,2,3,6,7,8ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். முயற்சியில் குறுக்கீடுகள் வரலாம்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மே3க்குள்  விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.  பதவி உயர்வு கிடைக்கவும் யோகமுண்டு.  அதன் பிறகு வேலையில் பொறுமை தேவை. வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. மே 7,8 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப்.21க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனையே பெறுவர். ஏப்.16,17, மே 14ல் மனக் குழப்பம் ஏற்படலாம்.  மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். புதன் சாதகமாக காணப் படுவதால் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று  வெற்றி அடைவீர்கள். மே3க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நெல்,கோதுமை, சோளம், மஞ்சள், பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காணலாம். புதிய சொத்து வாங்க  சில காலம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்ப நலனில் அக்கறையுடன் செயல்படுவர்.  சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். குடும்பத்தோடு  புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.  தோழிகள் மிக ஆதரவுடன் செயல்படுவர்.  மே 3க்கு பிறகு சற்று பொறுமை தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம்  ஒப்படைக்க வேண்டாம்.

மே 9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். ஏப்.21,22ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல்நலம் அதிருப்தியளிக்கலாம். ஏப்.25,26ல் உடல்நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: ஏப்ரல் 18,19,20,21,22, 27,28,29,30 மே 4,5,9,10  
* கவன நாள்: ஏப்.23,24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டம் எண்: 3,7 நிறம்:மஞ்சள், பச்சை.

* பரிகாரம்:
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபம்
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
* ஞாயிறன்று நீராடியதும் சூரிய நமஸ்காரம்

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.