ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழமை வாய்ந்த திரவுபதிஅம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கட்டடங்கள் அகற்றப்பட்டு தற்போது கோபுரங்கள், சிற்பங்கள், மண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ஏப். 22 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணி குழுவினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோயில் முன் யாகசாலை பூஜைகள் செய்வதற்கு யாகசாலை அமைப்பு, சிற்ப வேலைபாடு, பெயின்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.