பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
04:04
* ஏப்ரல் 14, சித்திரை 1, சனி: தமிழ்ப்புத்தாண்டு, மாத சிவராத்திரி, சிவாலயங்களில் சித்திரை விஷூ தீர்த்தம், திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலபிஷேகம், மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம்
* ஏப்ரல் 15, சித்திரை 2, ஞாயிறு: அமாவாசை, முன்னோருக்கு தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் செய்தல், திருத்தணி சிவன் சூரிய பிரபையில் எழுந்தருளல், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா
* ஏப்ரல் 16, சித்திரை 3, திங்கள்: அமாசோம பிரத்டசணம், அரசமரத்தை வழிபடுதல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம்
* ஏப்ரல் 17, சித்திரை 4, செவ்வாய்: சந்திர தரிசனம், சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை, திருச்சி சமயபுரம் மாரியம்மன் தேர், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன், கோயம்புத்தூர் தண்டுமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், காஞ்சிபுரம் திருப்போரூர் முருகன் அபிஷேகம்
* ஏப்ரல் 18, சித்திரை 5, புதன்: அட்சய திரிதியை, தானம் செய்ய நல்ல நாள், கார்த்திகை விரதம், பரசுராம ஜெயந்தி, உய்யக் கொண்டார் திருநட்சத்திரம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா ஆரம்பம். கும்பகோணம் பெருமாள் கோயில்களில் 12 கருட சேவை.
* ஏப்ரல் 19, சித்திரை 6, வியாழன்: சதுர்த்தி விரதம், மங்கையர் கரசியார் குருபூஜை, திருச்சி சமயபுரம் மாரியம்மன் பூப்பல்லக்கு, கரிநாள்
* ஏப்ரல் 20, சித்திரை 7, வெள்ளி: முகூர்த்த நாள், ஆதிசங்கரர் ஜெயந்தி, லாவண்ய கவுரி விரதம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,
திருவையாறு, கும்பகோணம், திருநெல்வேலி, திருச்செந்தூர் சிவன் கோயில்களில் சித்திரை உற்ஸவம் ஆரம்பம்.