Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசு வகையில் நன்மை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
17:40

நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை வாரி வழங்குகிறார். சுக்கிரன் மே 16ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கும், ஜூன்10ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சூரியன், சனி, ராகு மற்றும் செவ்வாயால் சுமாரான பலன் உண்டாகும். புதன் மே 21 வரை உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடுஉருவாகலாம். ஜூன்6ல் 3ம் இடமான மிதுனத்திற்கு சென்ற பின், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு உண்டாகும்.

குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும்.

குடும்பம் மாதத் தொடக்கத்தில் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். எந்த ஒரு முக்கிய செயலையும் நன்றாக சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும் மே15, ஜூன் 10,11ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மே 20,21ல் உறவினர் வகையில் விரோதம் ஏற்படலாம். ஆனால் ஜூன் 5,6ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பகைவரால் பிரச்னை ஏற்பட்டாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை உண்டாகாது. புதிதாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். மே 16,17 ஜூன் 7,8,9,12,13ல் பண விரயம் ஆகலாம். மே 24,25ல் எதிர் பாராத வகையில் பணவரவு இருக்கும்.  ஜூன்  6க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. இடமாற்ற பீதி மே 21க்கு பிறகு மறையும்.  இருப்பினும் சுக்கிரனால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஜூன் 3,4ல் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். ஜூன் 6க்கு பிறகு அரசு பணியாளர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர். மே 22,23ல் மனக்குழப்பம் ஏற்படலாம். சமூக நலசேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். இருப்பினும் குரு சாதகமாக இருப்பதால், ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்கும்.

விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். வழக்கு. விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்களால் வீட்டிற்கு பெருமை உண்டாகும். மே 16க்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். மே 18,19, ஜூன் 14 ஆகிய நாட்களில் ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். மே 26,27,28 அனுகூலமான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

செவ்வாயால் அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

* நல்ல நாள்: மே 15,18,19, 24,25,26,27,28,  ஜூன் 3, 4,5,6, 10,11,14
* கவன நாள்:- மே 29,30 சந்திராஷ்டமம்:
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: மஞ்சள்,வெள்ளை

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை
●  சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
●  ஞாயிறன்று ராகுகாலத்தில் காளி வழிபாடு

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 
temple
கருணை உள்ளம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

மிதுனத்தில் இருக்கும் சுக்கிரன் ஜூன் 10ல் கடகத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.