Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  நன்மை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உயர்வு மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
17:41

துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். சுக்கிரன் மே16 வரை உங்கள் ராசியில் இருந்தும், பிறகு ஜூன் 10 வரை 2-ம் இடத்தில் இருந்தும், அதன் பிறகு கடக ராசியில் இருந்தும் நற்பலன் கொடுப்பார். குரு 6-ம் இடத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 2-ம் இடத்து பார்வையால் நன்மை காண்பீர்கள். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

ராசியில் உள்ள சூரியன், 12ல் புதன், 9-ல் செவ்வாய், கேது, 8ல் சனி ஆகியோரால் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம். புதன் சாதகமற்று இருப்பதால் மே21க்கு பிறகு அக்கம் பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  ஜூன் 6ல் அவர் ராசிக்கு 2-ம் இடத்திற்கு செல்வதால் செல்வாக்கு குறைவு, வீண்பிரச்னை ஏற்படலாம்.

என்றாலும், ராகு, சுக்கிரனால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
குடும்பத்தில் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். மே 16 க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். ஜூன் 10க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். மே 16,17, ஜூன் 12,13ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். மே 22,23ல் உறவினர் வகையில் வீண் பிணக்குகள் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 7,8,9ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் ராகுவால் தொழில் வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.

மே16க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆனால், எதிரியால் தொல்லை வரலாம். ஆனால் அவர்களின் சதியை குருபகவானின் பார்வை யால் முறியடிப்பீர்கள். மே 15,18,19, ஜூன் 10,11,14ல் சந்திர னால் சிறு தடைகள் வரலாம். மே 26,27,28ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மே21க்கு பிறகுகூட்டாளிகள்
வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும், பணிச்சுமையும் அதிகரிக்கும். முக்கிய பொறுப்பு களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். மே16க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜூன் 5,6 தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். ஜூன் 10க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மே 16க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்
பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். மே 24,25ல்
மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருபார்வை பலத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்
களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

புதிய சொத்து வாங்கும் எண்ணம் சற்று தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து ஆலோசிப்பீர்கள்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமை தேவைப்படும். மே 20,21ல் புத்தாடை, அணிகலன் வாங்க வாய்ப்புண்டு. மே 29,30ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
சகோதரர்கள் வகையில் பண உதவி கிடைக்கும்.  அலைச்சலால்
உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். பயணத்தின் போது கவனம் தேவை.

* நல்ல நாள்: மே 16,17,20, 21,26, 27,28,29,30, ஜூன் 5,6,7,8,9,12,13
* கவன நாள்: மே 31, ஜூன் 1,2
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, நீலம்

* பரிகாரம்:
●  புதனன்று பெருமாள் கோயில் தரிசனம்
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.