Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகிழ்ச்சி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) லாபம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சுபயோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
17:58

தன்னலம் கருதாமல் பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் ராசிக்கு 6-ம் இடத்தில் நின்றும், குரு 11-ம் இடத்தில் நின்றும் சுபயோகம் தர காத்திருக்கின்றனர். சுக்கிரன் ஜூன் 10ல் 8-ம் இடமான கடகத்திற்கு சென்ற பின் நன்மை தருவார். புதன் மே 21 ல் இருந்து ஜூன் 6 வரை அதிர்ஷ்டமான பலன் கொடுப்பார். ராசியில் இருக்கும் சனி, 2-ல் இருக்கும் செவ்வாய், கேது, 8-ல் உள்ள ராகுவால் சுமாரான பலனே கிடைக்கும். முக்கிய கிரகமான சூரியன், குரு பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். எதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை விலகும்.

குறிப்பாக மே 16க்கு பிறகு புதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணம் வாங்கலாம்.குடும்பத்தில் சுக்கிரனால் சமூகமதிப்பு உயரும். சிலர் உறவினர்களுடன் உல்லாச சுற்றுலா செல்வர். மே21க்கு பிறகு புதன் 6-ம் இடத்தில்
இருப்பதால் சுப நிகழ்ச்சி நடந்தேறும். ஜூன் 10க்கு பிறகு ஆடம்பர வசதி பெருகும். மனதில் சந்தோஷம் குடியிருக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். மே 31,  ஜூன்1,2ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 7,8,9ல் அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே சற்று விலகி இருக்கவும். ஜூன் 6க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணத்தின்  மூலம் ஆதாயம் கிடைக்கும். மே 29,30, ஜூன் 3,4ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். மே 16,17, ஜூன் 12,13ல் எதிர்
பாராத வருமானம் கிடைக்க  வாய்ப்புண்டு. மே 26க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. மே 21 க்கு பிறகு நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். விரும்பிய பணி, இடத்திற்கு மாற்றம் பெறலாம். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.

விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். மே 24,25 அனுகூலமான நாட்களாக அமையும். ஜூன் 6 க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. செவ்வாயால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை ஜூன் 10க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். விடா முயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். பணப்புழக்கம் கூடும்.

மே15, ஜூன் 10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஜூன் 6க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடை படலாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்கள் வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். ஜூன் 5,6ல் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மே 18,19, ஜூன் 14ல் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர் வகையில் பணஉதவி கிடைக்கும்.

மே 26,27,28 ல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மே 21 வரை சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மே 22,23ல் வயிறு
தொடர்பான பிரச்னை வரலாம்.

* நல்ல நாள்: மே 16,17, 18,19,24,25,26,27,28,31 ஜூன் 1,2,5,6,12,13,14
* கவன நாள்: மே 20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
●  தேய்பிறை  அஷ்டமியில் பைரவர் வழிபாடு
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
●  ரோகிணியன்று கிருஷ்ணருக்கு நெய் தீபம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.