Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் ... பகவதியம்மன் கோவில் திருவிழா: 5 ஆண்டுகளுக்கு பின் தூக்குத் தேர் பகவதியம்மன் கோவில் திருவிழா: 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
11:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி மாத அமாவாசையை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஜோதி ஏற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.  

ஊஞ்சல் தாலாட்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி உட்பட லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர், விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple
பழநி:பழநி முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, நேற்று சுவாமிக்கு காப்புக் கட்டுதலுடன் துவங்கி ... மேலும்
 
temple
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple
சபரிமலை: புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்தார். இதையடுத்து ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: பாலாற்றில், மணல் லிங்கம் அமைத்து நடத்திய வழிபாட்டில், எராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.