Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்:  (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சிக்கான மாதம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆடை ஆபரணம் சேரும்
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆடை ஆபரணம் சேரும்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி பகவானால் நன்மை தொடரும். உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜூலை 5  சிம்மத்திற்கு சென்ற பின் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். ஜூன் 24க்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு நேரலாம்.  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுபநிகழ்ச்சி கைகூட தாமதம் ஆகலாம்.  ஜூன் 16,17, ஜூலை 14,15ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 9,10,11 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால்  ஜூன் 23,24ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 21,22 ல் புத்தாடை, அணி கலன்கள் வாங்கலாம். செவ்வாயால் அவ்வப்போது மனைவி வகையில் பிரச்னை, எதிரிகளால் தொல்லை வரத் தான் செய்யும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின்  ஆதரவு ஓரளவு கிடைக்கும்.  அதிக அலைச்சல் ஏற்படலாம். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். சிலர் இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு. இது பிடிக்காததாக இருந்தாலும், போகப்போக அதுவே சாதகமானதாக அமையும். ஜூலை 7,8ல்  எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

தொழில், வியாபாரத்தில் 6-ம் இடத்தில் இருக்கும் சனி பகவானால் எண்ணற்ற நன்மை கிடைத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று இருக்கிறீர்கள். ஆற்றல் மேம்படும். சூரியனால் அவ்வப்போது வீண் விரயம் ஏற்படலாம். ஜூன் 18,19,20, ஜூலை 12,13,16ல் சந்திரனால்  சிறு தடைகள் உருவாகலாம். ஜூன் 27,28,29ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூலை 5க்கு பிறகு வியாபாரிகளுக்கு
அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.  புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும். ஜூலை 5 க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். ஜூன் 25,26 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்கவும். பெற்றோரின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவு இருக்காது.  கால்நடை மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள் குதூகலமாக செயல்படுவர்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுக்கிரனால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாத முற்பகுதியில் தூரத்து உறவினர் வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். ஜூன்30, ஜூலை1 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 24க்கு பிறகு நண்பர்களின் வகையில் பொருள் இழப்பு ஏற்படலாம்.    உடல்நிலை சுமாராக இருக்கும். உடல்நலனில்  அக்கறை காட்டுவது அவசியம்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,21,22,27,28,29,30, ஜூலை 1,7,8,9,10,11,14,15
* கவன நாள்: ஜூலை 2,3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்கள்: 2,3 நிறம்: வெள்ளை, நீலம்

* பரிகாரம்:
● ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
● செவ்வாயன்று துவரை தானம்
● காலையில் சூரியவழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar