Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆடம்பர வசதி பெருகும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

தன்னலம் கருதாமல் பிறர் நலன் நாடும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவர். புதன் ஜூன் 24க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். குருவால் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். எதிர்பார்ப்பு நிறை வேறும். ஆனால் சூரியன், செவ்வாயால் அவ்வப்போது முயற் சியில் தடை குறுக்கிடலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

குடும்பத்தில் ஆடம்பர வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலை க்கும். பெண்கள்  ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நற்சுகம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். ஜூன் 24 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்து
வேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். ஜூன் 27,28,29ல் சகோதரிகளால் அனுகூலம் காணலாம். ஜூன் 23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே  நேரம் ஜூலை 5,6ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்றுவிலகி இருக்கவும். ஜூலை 2,3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செவ்வாயால். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. 


பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் பணிபுரியவும். ஜூன் 24க்கு பிறகு சிறப்பான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். வேலைப்பளு குறைய வாய்ப்புண்டு.

சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். ஜூன் 21,22ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை நீடிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். எதிலும் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  ஜூன் 25,26,30, ஜூலை 1 ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.  ஜூலை 9,10,11ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.

கலைஞர்களுக்கு சக பெண் கலைஞர்கள்  ஆதரவுடன் செயல் படுவர். விருது, பாராட்டு போன்றவை கிடைக்க வாய்ப்புண்டு.  அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயரோடு நல்ல பதவியும் கிடைக்கப் பெறுவர்.  ஜூலை 7,8 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சீரான வளர்ச்சியைக் காணலாம். குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர். ஜூன்
24 வரை விடாமுயற்சி தேவைப்படும்.

பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். நெல், சோளம் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன் 24க்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.  ஜூலை 2,3,4 ல் அனுகூலம் காண்பீர்கள்.  பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் கிடைக்க பெறலாம். ஜூலை 12,13ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூன் 21,22,23,24,27,28,29, ஜூலை 2,3,4,9,10,11,12,13
* கவன நாள்: ஜூன் 16,17, ஜூலை 14,15
* அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்   

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
● வெள்ளியன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு  தீபம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar