Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) அதிர்ஷ்டம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆரோக்கியம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பரிசு மழை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
16:48

தனித்தன்மையால் பிறரைக் கவரும் தனுசு ராசி அன்பர்களே!

புதன், குரு தொடர்ந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஆக.2 வரை நற்பலன் கொடுப்பார். புதனால் உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை பெறலாம். தற்போது குருபகவான் 11-ம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவரால் நினைத்தது நிறைவேறும்.  சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சாதகமாக உள்ளது. அதன் மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். ஜூலை 25,26ல் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். ஜூலை 20,21,ஆக.16ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக. 1,2 ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும்.

செவ்வாயால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஜூலை 18,19, ஆக. 14,15ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் குருவால் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஜூலை 22,23,24, 27, 28,29ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆக. 6,7ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். செவ்வாயால் பகைவர் வகையில் தொல்லை வரலாம். ராகுவால் பங்குதாரர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தம் விடா முயற்சியால் கையெழுத்தாகும். ஆக.2 க்கு பிறகு எதிரியால் தொல்லை வரலாம். மறைமுகப் போட்டி குறுக்கிடலாம்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. ஆனாலும் பொதுநலப்பணிகள் மூலம் மனதிருப்தி உண்டாகும்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பரிசு, பாராட்டு மழையில் நனைவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் சீரான மகசூலைப் பெறுவர். நெல், சோளம்,மஞ்சள் போன்ற பயிர்கள் மூலம் லாபம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம்  பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். தடைபட்ட திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் வேலையில் நிம்மதி கிடைக்கப் பெறுவர். ஜூலை 30,31ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம்.  ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. ஆக.8,9 ல் விருந்து, விழா  என சென்று  வருவீர்கள்.

* நல்ல நாள்: ஜூலை 18,19,20,21,25,26,30,31, ஆக.6,7,8,9,14,15,16
* கவன நாள்: ஆக. 10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,5
* நிறம்: வெள்ளை, பச்சை

வழிபாடு:
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  தினமும் காலையில் நீராடியதும் சூரிய வழிபாடு
●  பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018) »
temple
நீங்கள் கடந்த மாதத்தை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும். காரணம் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான புதன் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச. 8 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பிறகு அவர் சாதகமாக காணப்படவில்லை. ரிஷப ராசிக்கு 7-ம் ... மேலும்
 
temple
புதன் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான துலாமில் வக்கிரம் அடைந்திருக்க இந்த மாதம் தொடங்குகிறது. இது சுமாரான ... மேலும்
 
temple
புதன் வக்கிரம் அடைந்து துலாமில் இருக்கிறார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். கல்விகாரகனான புதன் உங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.