Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை அய்யாவாடியில் ... பிராமி எழுத்தில் வருகிறது திருக்குறள் பிராமி எழுத்தில் வருகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் கொள்ளிடம் கரையில் அடக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் கொள்ளிடம் கரையில் அடக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2018
11:07

திருச்சி:ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல், நேற்று (ஜூலை 12)ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம், ராமானுஜர் மடத்தின், 50வது பட்டமாக திகழ்ந்தவர், ஸ்ரீரங்க நாராயண ஜீயர், 89.விழுப்புரம் மாவட்டம், நயினார்பாளையம் கிராமத்தில், பாலகிருஷ்ணமாச்சாரி - சேஷலட்சுமி தம்பதிக்கு, 1929, டிச., 3ல் பிறந்தார். ஆதிலட்சுமி அம்மையை மணந்த இவருக்கு, இரண்டு மகன், மூன்று மகள்கள்.

திருவானைக்காவலில் வேதமும், சிதம்பரத்தில் சமஸ்கிருதமும் பயின்ற இவர், கோவை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், அர்ச்சகராக இருந்தார். 60 வயதில், ஸ்ரீரங்கம் உடையவர் சன்னதியில், ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பட்டம் ஏற்று, ராமானுஜ மடத்தின், 50வது ஜீயராக பொறுப்பேற்றார்.

உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர், சிகிச்சை பலனின்றி, நேற்று (ஜூலை 12)ல் முன்தினம் உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் ராமானுஜர் மடத்தில், ஜீயர் உடல், பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக சுற்றுலா துறை அமைச்சர், நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் வளர்மதி, பா.ஜ., தேசிய செயலர், எச். ராஜா உட்பட முக்கிய பிரமுகர்கள், ஜீயர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று (ஜூலை 12)ல் காலை, 11:00 மணிக்கு ஜீயர் உடலுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, பல்லக்கில் வைத்து, நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.கொள்ளிடம் ஆற்றின் கரையில், ஆளவந்தான் படித்துறை பகுதியில் உள்ள நந்தவனத்தில், மாலை, 3:30 மணிக்கு, ஜீயர் சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் பழனிசாமி இரங்கல்

ஸ்ரீரங்கம் ஸ்ரீராமானுஜ மடத்தின் ஜீயர் மறைவுக்கு, முதல்வர் பழனிசாமி, இரங்கல் தெரிவித்து ள்ளார்.முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது:ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், கோவை ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அர்ச்சகராக, தனி ஆன்மிகப் பணியை துவக்கினார். 60வது வயதில், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின், 50வது ஜீயராக பொறுப்பேற்று, அரங்கன் சேவையில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நேற்று முன்தினம் (ஜூலை 11)ல் அவர், முக்தியடைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும், மடத்தின் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar