Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்தது நிறைவேறுது ... பவானியம்மனை தரிசிக்க பக்தர்கள் பாதயாத்திரை பவானியம்மனை தரிசிக்க பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வந்தால் பதவி பெறலாம்
எழுத்தின் அளவு:
பழநி வந்தால் பதவி பெறலாம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
12:07

பழநி: மூன்றாம் படை வீடாக பழநி திருஆவினன்குடி கோயில் விளங்குகிறது. இத்தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார்.

இங்கு ஒரே இடத்தில் மகாலட்சுமி (திரு), காமதேனு (ஆ), சூரியன் (இனன்) பூமாதேவி (கு), அக்னி (டி) ஆகிய ஐந்து தெய்வங்கள் இணைந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குப்படி, தண்டனையோ மற்றும் நற்பலன்களையோ வாரி
வழங்கும் சாயா கிரகம் சனிபகவான் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார்.

இந்த சனிபகவானின் சிறப்பு என்னவென்றால், ஒருசமயம் இந்திரன் தனது ஆணவத்தால் சிவ யாக, பிரசாதத்தை ஏற்று கொள்ளாமல் அலட்சியமாக இருந்தார். இதனால் சனிபகவான் கோபம் கொண்டு இந்திரனை பிடித்து அவரது பதவியை இழக்க செய்தார். இந்திரன் சிவபெரு மானிடம் மன்னிப்பு கேட்டார்.

கிழக்கு நோக்கிய சனீஸ்வரனை வணங்கினால் மீண்டும் இந்திர பதவி கிடைக்கும் என சிவ பெருமான் கூறினார். இந்திரனும் பழநி திருஆவினன்குடியில் கிழக்கு திசையில் உள்ள சனிபகவானை வணங்கி பரிகாரம் செய்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றதாக கதை
கூறுகின்றனர்.

ஆகையால் இந்த சனீஸ்வரரை வணங்கினால் இழந்த பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு  உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாதாபிறப்பு போன்ற முக்கிய நாட்களில் வெள்ளிக் கவசம் சாத்தி, சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடக்கிறது. பழநி மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்கள் சனிபகவானை வழிபடுகின்றனர்.

அதனால் பழநிக்கு வந்தால் பதவி தரும் திருவாவினன்குடி சனீஸ்வரனையும் மறக்காமல் தரிசித்து செல்லுங்கள். பதவி வந்தால் வாழ்வில் நலம்பெறலாம்தானே. காலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை நடைதிறந்திருக்கும். விழாக்காலங்களில் அதிகாலை 4:00 மணி
முதல் இரவு நடைசாத்தப்படும் நேரம் மாறுபடும். விபரங்களுக்கு: 04545 242493.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar