ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டை மாசாணி அம்மன் கோயில் ஆடி விழா ஜூலை 9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. திருவிளக்கு பூஜை,மயான பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம்,அக்னிசட்டி, காவடி, முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். கடைசி நாளான நேற்று பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.