Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி ... நல்ல நண்பனுக்கு சிறந்த உதாரணம் கர்ணன்! நல்ல நண்பனுக்கு சிறந்த உதாரணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பன் குந்துகாலில் விவேகானந்தர் இந்தியா திரும்பிய விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
11:01

ராமேஸ்வரம் : விவேகானந்தர் அமெரிக்கா சென்று இந்தியா திரும்பிய நாளை நினைவு கூறும் வகையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் விழா கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த, சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு, 1897 ஜன., 26ல் நாடு திரும்பியபோது, இலங்கை சென்று அங்கிருந்து கப்பல் மூலம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் வந்திறங்கினார். ராமநாதபுரம் சமஸ்தான மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி, தமது பரிவாரங்கள் மற்றும் பொதுமக்களுடன் குந்துகால் கடற்கரையில், விவேகானந்தருக்கு வரவேற்பு கொடுத்தார். படகில் இருந்து இறங்கிய விவேகானந்தரின் கால்பாதங்கள் நிலத்தில் பதியும் முன், தனது தலையில் வைத்து இறங்குமாறு கூறிய பாஸ்கர சேதுபதி, முழங்காலிட்டு கடற்கரை மணலில் அமர்ந்தார். மெய்சிலிர்த்துப்போன விவேகானந்தர் இதை மறுத்து சேதுபதியை கட்டித் தழுவிக்கொண்டார். பின் இரட்டை குதிரை பூட்டிய சாரட்டில், விவேகானந்தரை அமர வைத்த பாஸ்கரர் குதிரைகளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, தானே சாரட்டை இழுக்கத் துவங்கினார். இதைப் பார்த்த சமஸ்தான அதிகாரிகள், மன்னருடன் சேர்ந்து சாரட்டை இழுத்து விவேகானந்தரை பாம்பனில் இருந்த சேதுபதி கோட்டைக்கு அழைத்து சென்றனர். சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பிய நினைவைப் போற்றும் வகையில், நேற்று பாம்பன் குந்துகால் கடற்கரையில் விழா நடந்தது. மாலை 4 மணிக்கு, விவேகானந்தர் வேடமணிந்த மாணவர் ஒருவர் படகில் வந்திறங்க, கடற்கரையில் மன்னர் பாஸ்கர சேதுபதி மற்றும் அமைச்சர்கள் வேடமணிந்த மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாள முழக்கத்துடன் நடந்த கடந்த கால வரலாற்று நிகழ்வின் தத்ரூப காட்சியை கடற்கரையில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர். தொடர்ந்து விவேகானந்தர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் உபதலைவர் சுவாமி சங்கரானந்த மகராஜ் தலைமை வகித்தார். ராமேஸ்வரம் சுவாமி சுத்தானந்த மகராஜ் வரவேற்றார். ராமகிருஷ்ண தபோவனம் செயலர் சுவாமி நித்யானந்த மகராஜ், மதுரை ராமகிருஷ்ணமடம் நிர்வாகி சுவாமி கமலாத்மனந்தா மகராஜ் ஆசியுரை வழங்கினர். ராமநாதசுவாமி கோவில் தக்கார் குமரன்சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar