பதிவு செய்த நாள்
06
ஆக
2018
03:08
* ஆகஸ்ட் 4 ஆடி 19: திருவானைக்காவல், காளையார்கோவில், திருப்பாப்புலியூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருவாடானை கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் புஷ்ப விமானம், இருக்கன்குடி மாரியம்மன் வீதி உலா.
* ஆகஸ்ட் 5 ஆடி 20: ஆடிக்கார்த்திகை, மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை, திருத்தணி முருகன் தெப்பம், நயினார்கோயில் சவுந்திர நாயகி பல்லாங்குழி ஆடும் கோலம், நாகப்பட்டினம் நீலாயதாட்சி பூத வாகனம், சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் ரிஷப வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வண்டிச்சப்பரம்.
* ஆகஸ்ட் 6 ஆடி 21: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப் பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரப்பிரபை, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், நயினார்கோவில் சவுந்திர நாயகி ராஜாங்க அலங்காரம்.
* ஆகஸ்ட் 7 ஆடி 22: ஏகாதசி விரதம், நாகப்பட்டினம் நீலாயதாட்சி கிளி வாகனம், நயினார்கோயில் சவுந்திரநாயகி ஆடிவரும் திருக்கோலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப்பரங்கி நாற்காலி, ரங்கமன்னார் அனுமன் வாகனம்.
* ஆகஸ்ட் 8 ஆடி 23: கூற்றுவ நாயனார் குருபூஜை, நயினார் கோயில் சவுந்திரநாயகி வேணுகான கிருஷ்ணர் அலங்காரம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நாகப்பட்டினம் நீலாயதாட்சி சிவபூஜை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனம், ரங்கமன்னார் கோவர்த்தனகிரியில் பவனி.
* ஆகஸ்ட் 9 ஆடி 24: பிரதோஷம், மாத சிவராத்திரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து கருட சேவை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கரிஷப வாகனம், நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம், இருக்கன்குடி மாரியம்மன் வீதியுலா.
* ஆகஸ்ட் 10 ஆடி 25: போதாயன அமாவாசை, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் தேர், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி தங்கப்பல்லக்கு, திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 1008 விளக்கு பூஜை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியல், ரங்கமன்னார் யானை வாகனம்.