Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழனி முருகன் கோயில் விநாயகர் ... மும்பையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பாதுகாப்பில் 15000 போலீசார் மும்பையில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் விநயாகர் சதுர்த்தி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் விநயாகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

14 செப்
2018
06:09

விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோடு என்.ஜி.ஓ. காலனியில் வழிவிடு விநாயகர் கோயிலில் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (செப்., 13ல்) நடந்தது. மாலை 4:00 மணிக்கு யாகம், ஹோமம் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அர்ச்சனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு விநாயகர் உற்ஸவமூர்த்தி என்.ஜி.ஓ. காலனி சர்வீஸ் ரோட்டில் சத்திரெட்டியப்பட்டி கூட்டு ரோடு, ஹவுசிங் போர்டு, காவேரி நகர், என்.ஜி.ஓ. காலனி கிழக்கு, ஆய்வு மாளிகை வழியாக வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாதவ நாராயணன் செயலாளர் ஜெயராமன், பஜனை குழுத் தலைவர் மீனாட்சி
ஐயப்பன் செய்தனர்.

ராஜபாளையம்: ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

தினமும் ஆன்மிக சொற்பொழிவு, மகான்களின் அருளாசி, பட்டிமன்றம், திருவாசகம் முற்றோதல், திவ்ய நாம சங்கீர்த்தனம், இலவச திருமணம், நலத்திட்ட உதவிகள், பல்வேறு நிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தன.விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று (செப்., 13ல்) காலை திருஈங்கோய் மலை ஸ்ரீலலிதா சமாஜம் மாதாஜி குழுவினரின் கணபதி ஹோமத்துடன்
அபிஷேக ஆராதனை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

தொடங்கிய மதியம் 3:00 மணிக்கு விழா பந்தலில் இருந்து யானை, குதிரை வாகனம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன், மும்பை டோல் மேளம் உள்ளிட்ட மேளங்களுடன் கயிலாய வாத்தியங்களுடன் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின் முன்னே மகா ராஜ கணபதி முன் செல்ல நான்கு வகையான அலங்காரகளுடன் விநாயகர் வாகனங்களில் பின்
தொடர்ந்தனர்.

திடலில் இருந்து துரோபதி அம்மன் கோயில், பழைய பஸ்ஸ்டாண்ட்,  காந்தி சிலை ரவுண்டானா, திருவனந்தபுரம் தெரு சென்று திரும்பி கலைமன்றம் வழியாக ஐ.என்.டி.யு. சி., நகர் எதிரில் உள்ள புதியாதி குளம் கண்மாயில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

*ராஜபாளையம் அருகில் உள்ள தேசிகாபுரம் கிராமத்தில் இந்து முன்னணி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. கட்சி உறுப்பினர் தர்மக்கனி தலைமையில் மதியம் ஊர்வலம் நகர்வலம் சுற்றி புதியார்குளம், கண்மாய் அடைந்தது. ஏற்பாடுகளை பா.ஜ., மாவட்ட செயற்குழு சுகந்தம் ராம கிருஷ்ணன் செய்திருந்தார்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, அழாக்கரிசி  விநாயகர், சொக்க லிங்கபுரம் படித்துறை விநாயகர், எஸ்.பி.கே., பள்ளி ரோட்டில் சித்தி விநாயகர், அரச  மரம் விநாயகர், சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் வளாக வெள்ளை விநாயகர், குமரன் புதுத்தெரு முக்தி விநாயகர், பாப்பாங்குளம் கண்மாய் வல்லப கணபதி, வெள்ளக் கோட்டையில் கோட்டை பிள்ளையார், தாதன்குளம் விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது.

கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல், பொரி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவகாசி: சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேசப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ப்பட்டது. பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். தலைமை முதல்வர் முதலர்வர் அம்பிகாதேவி பாலசுந்தரம் பேசினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி மாணவர்களுக்கு தளாளர் ஜெயக்குமார் பரிசு வழங்கினார். துணை முதல்வர் ஞான புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar