Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோட்டில் துறவறம் ஏற்கும் இளம்பெண் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலா வருமா தங்கத்தேர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சென்னை செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 செப்
2018
11:09

சென்னை: நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, சோழப் பேரரசி செம்பியன் மாதேவியின் பஞ்சலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்க ப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த, செம்பியன்குடி கிராமத்தை சேர்ந்தவர், செம்பி யன் மாதேவி. இவருக்கும், சோழ மன்னர்களில் ஒருவரான, கண்டராதித்யனுக்கும் திருமணம் நடந்தது. செம்பியன் மாதேவிக்கு, 14 வயதான போது, குழந்தை பிறந்தது. அதற்கு, மதுராந்த கன் என பெயர் சூட்டினர். பின் உத்தம சோழன் என அழைக்கப்பட்டார். செம்பியன் மாதேவி, தன் 15வது வயதில் கணவரை இழந்தார். அதன்பின் சாகும் வரையில் தீவிர சிவ பக்தையாக இருந்தார். விருத்தாசலம் உள்ளிட்ட 10 இடங்களில் சிவன் கோவில்களை கட்டினார் என்பது வரலாறு.

இவரது பெயரில் நாகை மாவட்டத்தில் செம்பியன் மாதேவி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கைலாசநாதர் கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை இருந்தது. இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்கள் திருடினர்.

அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படு கிறது. சிலையின் தற்போதைய மதிப்பு 60 கோடி ரூபாய். இந்தச் சிலை தற்போது அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.சிலை திருட்டு போனது குறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிலையை மீட்கும் முயற்சியில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar