Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லோரும் முக்கியமானவரே! யாதுமாகி நின்றாய் தேவி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெய்வத்தாயும் மானுட மகனும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
01:10

சிவா என் நண்பரின் மகன். வயது நாற்பதுக்குள். பிரபல தனியார் நிறுவனத்தில் கணக்குப் பிரிவில் உதவி மேலாளராக இருக்கிறான். நல்ல நிறம். உயரம். அவன் வாழ்வில் அப்படி ஒரு சோகம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பல வருடங்களுக்கு முன் அவன் திருமணம் நடந்தது. அவன் மனைவி வித்யா பேரழகி. அடுத்தடுத்து  தேவதை போல அழகான இரு பெண்குழந்தைகள்.  மகிழ்ச்சியாக சென்ற அவன் வாழ்வில் பேரிடி இறங்கியது. வித்யா விவாகரத்து கேட்டாள். என்னால் என் குழந்தைகளைப் பிரிந்து இருக்க முடியாது என்றான் சிவா. “குழந்தைகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னை ஆளை விடுங்கள்.” என்று ஈரமில்லாமல் சொல்லிச் சென்றாள் வித்யா.  குழந்தைகளுக்குத் தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்து வருகிறான் சிவா.

சிவா என்னைக் காண அன்று என் அலுவலகம் வந்தான். “நல்லா இருக்கீங்களா அங்கிள்?”“வா...சிவா. உட்காரு. என்ன திடீர்னு?”“அங்கிள்...உங்க பெர்மிஷனோட கொஞ்ச நேரம் இங்க அழலாமா?” என் பதிலை எதிர்பார்க்காமல் அழத் தொடங்கினான். பின் கரகரத்த குரலில் பேசினான். “என்னால முடியல அங்கிள். ரெண்டு பொண்ணுங்களுக்கு துணி துவைச்சி, சமையல் பண்ணி, அவங்கள ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டு, கூட்டிக்கிட்டு வந்து, நடுவுல ஆபீஸ் வேலையும் பாத்து. . . இது என்ன வாழ்க்கை அங்க்கிள்.. சுமைதாங்கி வாழ்க்கை.  எனக்குன்னு ஒண்ணுமே செஞ்சிக்கமுடியல.  கல்யாணமான புதுசுல எப்பிடியாவது ’சிஏ’ யில் மிச்சம் இருக்கற பேப்பர படிச்சிப் பாஸ் பண்ணலாம்னு கனவு கண்டேன். இப்போ அதை யோசிக்கக்கூட முடியல அங்க்கிள். அன்றாடப் பாடே பெரும்பாடா இருக்கு. கடைசி வரைக்கும் இப்படியே இருந்து செத்துருவேனோன்னு பயமா இருக்கு. காலையில நாலரை மணிக்கு எந்திரிக்கறேன். ஆளாளுக்கு விருப்பமான பானத்தை  தயார் பண்ணனும். அப்புறம் அவசரம் அவசரமா டிபன் தயார் செய்யணும்.  எனக்கும் பெரியவளுக்கும் இட்லி, தோசை அதுமாதிரி. சின்னவளுக்கு ப்ரெட், ஜாம்.  மதியச் சாப்பாடும் ரெண்டு வகை செஞ்சாகணும். பெரியவ என்னை மாதிரி சாம்பார் சாதம், தயிர் சாதம்னு சாப்பிடுவா. சின்னவளுக்கு புலாவ், கீ ரைஸ், பிரியாணின்னு செஞ்சி தரணும். சாயங்காலம் டிபன் ராத்திரி சாப்பாடு. நடுவுல வாஷிங் மெஷின்ல துணியப் போட்டு எடுக்கணும். பாத்திரம் கழுவணும். அப்பப்பா... ராத்திரி நான் படுக்கப்போக்கும்போது பதினொரு மணி ஆயிடும்.
திருப்பியும் காலையில நாலரை மணிக்கு எந்திரிக்கணும். இதுல ஆபீஸ்ல ஆடிட், ப்ராஜெக்ட்டுன்னு வந்துட்டா முழி பிதுங்கிரும். வேலைக்கு ஆள் வைக்க வசதியில்லை.

அங்கிள் நீங்க பச்சைப்புடவைக்காரி மீனாட்சிட்ட பேசறீங்களாமே! ஏன் என்னை வாழவும் விடாம சாகவும் விடாம சித்ரவதை பண்றான்னு கொஞ்சம் கேட்கிறீங்களா? கல்யாணமும் வேண்டாம்; குழந்தைகளும் வேண்டாம்னு என்னை விட்டுப் போன வித்யா சந்தோஷமா இருக்கா. படத்துல நடிக்கறளாம். பெரிய வீடு, புதுசா காரும் வாங்கிட்டாளாம். தப்பு பண்ணவ சந்தோஷமா இருக்க நான் மட்டும் ஏன் அங்கிள் கஷ்டப்படணும்? ஒருவேளை நல்லவங்களை சித்ரவதை பண்றதுதான் மீனாட்சியோட பொழுதுபோக்கா? அவ மனசுல அன்புங்கறதே கிடையாதா?” என்ன வார்த்தைகள்! எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் கண்கள் கலங்கின. நீண்டநேரம் புலம்பிய சிவா புறப்பட்டான்.  அலுவலகத்தைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன். பச்சைப்புடவைக்காரியை பழிக்கிறானே என்ற விரக்தியுடன் காரில் அமர்ந்தேன். காரைக் கிளப்பவும் மனமில்லை.  ’நீ கெட்ட அம்மா’ என மழலை மொழியில் குழந்தை சொன்னால், தாய் கோபம் கொள்வாளா என்ன? பக்கத்து சீட்டில் பச்சைப்புடவைக்காரி. “காரை எடு. விளக்கம் தருகிறேன்”

காரைக் கிளப்பினேன். ஆள் நடமாட்டமில்லாத வெளிப்புறச் சாலைகளில் கார் வழுக்கிக்கொண்டு போனது. பச்சைப்புடவைக்காரியின் வார்த்தைகள் காதில் தேனாக பாய்ந்தன. “இது கிரேக்கப் புராணங்களில் வரும் கதை. சிசிஃபஸ் என்ற மன்னன் ஏதோ ஏமாற்றுவேலை செய்து தன் மரணத்தை நிரந்தரமாக ஒத்தி வைத்தான். இதில் சினமடைந்த கடவுள் காலம் என்ற ஒன்று இருக்கும் வரை அவன் செய்வதற்கு ஒரு வேலை கொடுத்தார். ஒரு பெரிய கல்லை உருட்டிக் கொண்டுபோய்  மலையுச்சியில் சேர்க்கவேண்டும். கல் உச்சியை அடைந்தவுடன்  உருண்டு கீழே விழும். அவன் மீண்டும் கீழே வந்து முதலில் இருந்து வேலையைத் தொடங்க வேண்டும். யோசித்துப் பார். இது முடிவே இல்லாத வேலை. கல்லை மேலே ஏற்றி முடித்தவுடன் அவன் மனதில் ஒரு கணம் மகிழ்ச்சி இருக்கும். அப்பா...சொன்ன வேலையைச் செய்து முடித்துவிட்டோமென்று. ஆனால் அடுத்த கணமே கல் கீழே உருண்டு போய்விடும். அந்த வேலையை மீண்டும் செய்ய அவன் மலையில் இறங்கி வரும் போது அவன் மனநிலை எப்படி இருக்கும்?”

“சிவாவின் மனநிலையைப் போல் வெறுப்பாக இருக்கும் தாயே”“இப்படி ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வது தான் சம்சார பந்தம். ஆனால் இந்த பந்தத்தை உடைத்துக்கொண்டு வெளியே போக முடியாது. இது தான் நம் நிலை என உணர்ந்து ஏற்கும் போதும், நமக்கு விதிக்கப்பட்ட வேலையை செம்மையாகச் செய்ய வேண்டும் என நினைக்கும் போதும்தான் சம்சாரத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  தொடர்ந்து கல்லை மலைக்கு உருட்டிச் செல்லும் சிசிஃபஸ்ஸுக்கு அந்த வேலையில் நல்ல திறமை கிடைக்கும். அந்தச் சுமையை விரும்பி ஏற்கும்போது அவன் முன்னேற வழி கிடைக்கும். உருண்டு விட்ட கல்லை மீண்டும் புரட்ட மலையிறங்கி வரும் போது அவன் மனதில் கவிதை தோன்றலாம். காவியம் உதிக்கலாம். உலகின் சிறந்த படைப்பாளிகளின் வாழ்க்கையை எடுத்துப் பார். அவர்களுக்கும் கல்லை மலையுச்சிக்கு உருட்டிச் செல்லவேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்தன. அதைச் செய்து கொண்டே அவர்கள் கவிதை, காவியம் படைத்தனர். ஓவியம் வரைந்தனர். காலம் கடந்து நிற்கும் சிற்பங்கள் செய்தனர்.  காரை ஓரம் கட்டிவிட்டு அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். “சிவா செய்வது சலிப்பூட்டும் வேலைகள் அல்ல அவன் செய்வது மாபெரும் தவம்” வாழ்வில் துன்பப்படுபவனுக்கு இத்தத்துவம் ஆறுதல் தருமா? என் எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாக அவள் பேசினாள்: “சிவாவின் சுமையை நான் இறக்கிவைக்கவில்லையே என்று வருத்தமா?”என் கண்கள் கலங்கின. நான் இவளது கொத்தடிமை.  கொத்தடிமைக்கு ஏது வருத்தம் மகிழ்ச்சி எல்லாம்? உணர்வுகள்  இருந்தால் அந்த அடிமைத்தனம் பூரணமாக இருக்காதே! “சரி உனக்கு மட்டும் சொல்கிறேன். சிவாவிடம் சொல்லாதே. அவன் வாழ்க்கை இப்படியே போகாது. அப்படி போகவும் நான் விடமாட்டேன். இன்னும் ஏழெட்டு ஆண்டுக்குள் அவனது பெண்கள் படிப்பிற்காகவும், திருமண வாழ்வுக்காகவும் அவனைவிட்டுச் சென்று விடுவர்.

அப்போது சமையல் கலையில் சிவாவிற்கு இருக்கும் தேர்ச்சி அவன் வாழ்வையே புரட்டிப் போடும். இந்த நாட்டின் சிறந்த சமையற்கலை வல்லுனராக அவன் வருவான். அவன் எழுதும் சமையற்கலை புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கும். அப்போது அவன் சாரதா என்றொரு பெண்ணைச் சந்திப்பான். இருவரும் பல ஆண்டுகள் இன்பமாக வாழ்வார்கள்.  போதுமா?” “தாயே... உங்களையா சிவா பழித்துப் பேசினான்? இப்போதே அவனை ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்”
“வேண்டாம். உலகில் எத்தனையோ பிள்ளைகள் தாயின் தியாகத்தை அறியாமல் ஏசுகிறார்கள். அதற்காகத் தாய் கோபம் கொள்வதில்லையே! மனிதத்தாயே அப்படி இருக்கும் போது...”“தாயே நீங்கள் தெய்வத்தாயாகவே இருந்து விட்டுப் போங்கள். ஆனால் நான் சாதாரண மனிதன் தானே! சிவா நல்ல நிலைக்கு வந்தவுடன் அவன் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் கேட்பேன் தாயே!

“டேய் அன்னிக்கு எங்காத்தாவ என்ன பேச்சு பேசின...  அன்புங்கறதே அவ மனசுல கிடையாதோன்னு நாக்குல நரம்பில்லாமக் கேட்டியேடா! ஆமாடா.. அவ மனசுல அன்பில்லதான். ஏன்னா அவளே அன்பு தாண்டா.  உன்னை சித்ரவதை  பண்றதுதான் அவ பொழுதுபோக்கான்னு ஒரு நாள் என்கிட்ட ஒப்பாரி வச்சியே  ஞாபகமிருக்கா? உனக்காக தன் வேலையெல்லாம் விட்டுட்டு என்கிட்ட வந்து  சிவா நல்லா வருவான்னு வாழ்த்தினாடா... என் பச்சைப்புடவைக்காரி. உன்னை வயத்துல சுமந்து பெத்தவளுக்கு மேல  அன்பு காட்டற என் தெய்வத்துக்கு அன்பில்லைன்னு சொன்னியேடா இந்த வாழ்க்கை அவ உனக்குப் போட்ட பிச்சைடா. இப்படி ஒரு உயர்ந்த நிலைக்கு நீ வரணும்னுதாண்டா அவ சின்ன வயசுல உன்னைச் சுமை தூக்கவச்சு பயிற்சி கொடுத்தா... போடா... போ என் முன்னால நிக்காத போய் அவ கால்ல விழுந்து கதறு. . போ...”அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை. விம்மி விம்மி அழுதேன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar