பதிவு செய்த நாள்
15
அக்
2018
12:10
புதுச்சேரி:புதுச்சேரி ஜெயின் கோவிலில், இந்திர துவஜ் பூஜை நேற்று (அக்., 14ல்) துவங்கியது. புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, 108 விசுத் சாகர்ஜி முனிவரின்
சீடர்களான 108 அர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர், நடைபயணமாக, 2,500 கிலோ மீட்டர் வந்தனர். இருவரின் முன்னிலையில் கோவிலில், வரும் 21ம் தேதி வரை, 8 நாட்கள்,
உலக மக்கள் நலத்திற்காகவும், உலக அமைதிக்காக இந்திர துவஜ் எனும் பூஜை நடக்கிறது. இப்பூஜை நேற்று (அக்.,14ல்) துவங்கியது. இதில், இந்திரர்கள் பூஜிக்கும் 458 ஜெயின் ஆலயங்கள் போல் உருவாக்கி, பூஜையும், கொடியேற்று விழாவும் நடைபெறவுள்ளது.