Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலையை ராஜினாமா செய்தல் ஸ்வாமிகளின் தினச்சரியை
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
ஸ்வாமிகளின் பாராயண தபஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் செய்திருக்கிறார்.

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம்     500
ஸப்தாஹமல்லாத பாராயணம்         200
உபன்யாஸங்கள்             200
ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம்     200
நவாஹமல்லாத பாராயணம்         100
உபன்யாஸங்கள்               60
ஸ்ரீமத் சுந்தரகாண்ட முழு பாராயணம்    2700
ஸ்ரீமத் சுந்தரகாண்ட சாதாரண பாராயணம்      300

மேற்கண்டவைகளில் பாதிக்கு மேல் குருவாயூர், காஞ்சிபுரம் முடிகொண்டான், திருப்பதி, திருத்தணி, உப்பிலியப்பன் கோயில்  நாமக்கல் போன்ற க்ஷேத்திரங்களிலும் ஆஞ்சனேயர் கோயில்களிலும் ஆத்மார்த்தமாக செய்திருக்கிறார். மேற்படி எண்ணிக்கைகளை கவனித்தாலே ஸ்வாமிகள் எந்த அளவிற்கு இந்த க்ரந்தங்களுக்கு அவர் வாழ்க்கையில் முக்கியதுவம் அளித்தார் என்பது நன்கு விளங்கும். பொதுவாக இந்த க்ரந்தங்களில் உபன்யாஸம் செய்வதற்காகவே ஈடுபாடு கொள்பவர்கள் தான் அதிகம். ஆனால் நம் ஸ்வாமிகளோ இவற்றில் தானே வேறு எந்த ப்ரதி ப்ர்யோஜனத்தையும் பாராமல் ஈடுபட்டிருந்தார். இதனால் தானோ என்னவோ இந்த க்ரந்தங்களை ஒரு லௌ ஸம்பத்தாக மாற்றாமல் ஆத்ம க்ஷேமத்திற்காக ஸ்வாமிகளால் ஈடுபட முடிந்தது.

இனி ஸ்வாமிகள் செய்த சில பாராயண விபரங்களை நம் நினைவிற்கு எட்டியவரையில் கீழ்க்கண்டவாறு அளித்திருக்கிறோம்.

1. டி.என். ஜகதீஸன் (உணஞ்டூடிண்ட ணீணூணிஞூஞுண்ண்ணிணூ) என்பவருக்கு 1952ல் பத்து மாதங்கள் தினம் இரவு அவர் வீட்டில் ஸ்ரீமத் ராமாயணம் ஒவ்வொரு ச்லோகத்திற்கும் அர்த்தம் சொல்லி வந்தார்.

2. 1953ல் குருமூர்த்தி என்பவருக்கு ஸ்ரீமத் பாகவதம் எல்லா ச்லோகத்திற்கும் தினம் இரவு போய் அர்த்தம் சொல்லி வந்தார். இந்த மாதிரி ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமத் ராமாயணம் எல்லா ச்லோகங்களுக்கும் 3 சமயங்களில் சில முக்கிய பக்தர்களுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார்.

3. சென்னையில் கே.எஸ். ராஜகோபாலன் வீட்டில் சுமார் 12 வருடங்கள் (1956 முதல் 1968 வரை) நவராத்திரி சமயத்தில் ஸ்வாமிகள் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்போது அர்த்தங்களையும் எடுத்துச் சொல்லி எல்லோருக்கும் பூஜை பாராயணங்களில் ஈடுபாடு வளரும்படி செய்வார்.

4. 1960ல் திருவல்லிக்கேணி தவனோத்ஸவ பங்களாவில் 45 நாட்கள், ஸ்ரீமத் ராமாயண ப்ரவசனம் செய்தார். இந்த ப்ரவசனத்திற்கு தினம் 5000 ஜனங்கள் திரண்டனர். இந்த உபன்யாஸப் பூர்த்தியில்தான் இவருக்கு ‘ப்ரவசன ப்ரவீண ’ என்கிற பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால் நம் ஸ்வாமிகளோ, பகவானிடம் இந்தக் கூட்டமும், பட்டங்களும் இதோடு நிற்கட்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டார். இதற்கேற்ப, ஸ்வாமிகளின் அடுத்த ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸத்தை ஒரு தனி ஜீவனுக்காக செய்ய நேர்ந்தது.

5. 1960 முதல் 1970 வரை ஸ்ரீமத் பாகவத பாராயணத்தை தினம் காலை 5 மணி முதல் 8 மணி வரையில் செய்து முக்கியமான இடங்களில் அர்த்தங்களைச் சொல்லி எல்லோரையும் அனுபவிக்க வைத்திருக்கிறார்.

6. 1962 முதல் மூல பாராயணத்துடன் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ ப்ரவசனம் இரண்டு வேளைகள் செய்து வர ஆரம்பித்தார். முதன் முதலில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மூல பாராயணம் செய்த போது எவ்வாறு ஏழு நாட்கள் உலகத்தொடர்பு இல்லாமல் பகவத் ஸ்மரணத்துடன் தனது மனம் சாந்தியுடன் இருந்தது என்பதை நினைத்து பார்த்து ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்தை அடிக்கடி செய்து வரலானார்.

7. உபன்யாஸம், பாராயணம் இவைகளை ‘ஸ்வாந்த ஸுகாய ’ என்று துளஸிதாஸர் அனுபவித்தபடி இவரும் தன் ஜன்ம லாபத்தை மட்டும் கருதி செய்து வந்தார். பாராயணம், உபன்யாஸத்தின் பொழுது அதிலேயே முழ்கி மனம் உருகி வெளியுலகத்தை மறந்து செய்து வந்தார்.

8. ஸ்ரீமத் சுந்தர காண்டம் முழுவதையும் நியமத்துடன் தினம் ஒரு தடவை வீதம் தொடர்ந்து 68 நாட்கள் பாராயணம் செய்து முடிவில் யுத்த காண்டத்தை 4 நாட்களில் பாராயணம் செய்து முடித்து ராமபட்டாபிஷேகத்துடன் பூர்த்தி செய்வது வழக்கம். இந்த மாதிரி ஆத்மார்த்தமாக 5 தடவைகள் ஸ்வாமிகள் தன் வாழ்நாளில் செய்திருக்கிறார்.

9. ஸ்வாமிகள், 10 சிங்கராச்சாரி தெருவில் இருக்கும்பொழுது ரயில்வேயில் வேலையாக இருந்த ங.ஜானகிராமன் என்பவருடன் 1957ல் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு ஸ்வாமிகள் 2004, ஜனவரி 19 ஆம் தேதி சித்தியாகும் வரையில் நீடித்தது. இவ்வெளியீட்டில் கண்டிருக்கும் விஷயங்கள் முக்காலும் இவராலேயே தொகுக்கப்பட்டது. 1962 முதல் 1965 வரை தினமும் இவர் வீட்டில் (3 அய்யாசாமி செட்டி, தெரு, திருவல்லிக்கேணி) ஸ்வாமிகள் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்து வந்தார். அப்பொழுது ரங்கராஜய்யர் என்பவர் தினமும் கலந்து கொள்வார். இதே காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாயங்காலம் 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீமத் பாகவத உபன்யாஸம் நடந்து வந்தது.

10. 1963 ஆகஸ்டில் குருவாயூரில் 3 நாட்கள், ஸ்ரீமந் நாராயணீய உபன்யாஸம் செய்தார்.

11. 1966 வைசாக சுத்தத்தில் முடிகொண்டானில் ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனையின் போது ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணமும் ப்ரவசனமும் செய்தார். இது சமயம் ச்ரவணம்  செய்த வித்வான்கள், ஆலங்குடி ஸ்வாமிகள் போன்றே இவரும் உபன்யாஸம் செய்வதாக சிலாகித்தார்கள். மேலும் ஸ்வாமிகளின் அக்ஷர சுத்தமான பராயணத்தை மிகவும் போற்றினார்கள்.

12. முடிகொண்டானில் 1966 க்கு பிறகு மூன்று முறை 1974, 1975, 1980 ஆலங்குடி ஸ்வாமிகளின் ஆராதனை சமயம் ஸ்ரீமத் பாகவத பாராயணமும், <உபன்யாஸமும் செய்திருக்கிறார். பிறகு ஸ்வாமிகள் அதிஷ்டனத்தில் இருந்து ம்ருத்திகை (புனித மண்) எடுத்து வந்து அதை ஒரு கங்கை சொம்பில் வைத்துக் கொண்டு தன் க்ருஹத்திலேயே ஆராதனை சமயத்தில் ஸப்தாஹ பாராயணம் செய்து வந்தார்.

13. ஆலங்குடி ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்திற்கு சொல்லும் அர்த்தங்கள் தமக்கும் தோன்றுவதால் எப்பொழுதும் ஸ்ரீமத் பாகவத்திலேயே ஈடுபட்டு ஆத்மலாபத்தை அடையவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். இதன்படி 1969 டிசம்பரில் வேலையை ராஜினமா செய்தார். தனது 15 வயதிலேயே ராமக்ருஷ்ண உபதேச மஞ்ஜரியை 40 தடவைக்கு மேலும், வள்ளிமலை ஸ்வாமிகளின் சரித்திரத்தை சென்னை வந்த பிறகு நிறைய தடவைகளும் படித்திருக்கிறார். இவ்விரண்டும் தான் எப்பொழுதும் ஸ்ரீமத் பாகவதத்திலேயே ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக உதவியது.

14 1968 லிருந்து 1992 வரையில் அனந்தமங்கலம் (மயிலாடுதுறை - பொறையார்பாதையில் திருக்கடவூரிலிருந்து 2 கி.மீ.) த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சன்னிதியில் வருடம் ஒருமுறை ஸ்ரீமத் சுந்தர காண்ட முழு பாராயணம் செய்தார்.

15. 1969ல் ஹைதராபாதில் சுமார் 4 மாதங்கள் தங்கி ஸ்ரீமத் பாகவத பாராயணமும் உபன்யாஸமும் செய்தார்.

16. 1969 சித்திரை மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தன்று பஞ்சலோகத்தில் குருவாயூரப்பனின் விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்து கொண்டு தினமும் தனது க்ருஹத்தில் அபிஷேகம் பூஜை செய்து வந்தார். இந்த விக்ரஹம் தற்போது ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

17. 1969 -70 விசாகப்பட்டினம் மாருதி ஆச்ரமத்தில் 45 நாட்கள் தங்கி ஸ்ரீமத் சுந்தரக் காண்ட முழு பாராயணம் 68 முறை செய்தார்.

18. 1973 ஆவணி மாதத்தில் கோகுலாஷ்டமி சமயத்தில் மஹாபெரியவாள் உத்தரவு செய்து நம் ஸ்வாமிகள், பெரியவாளின் சன்னிதியில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணமும், ப்ரவசனமும் செய்தார். இது தொடர்ந்து 1991 வரை 19 வருடங்கள் நடந்தது. மஹா பெரியவாள் பாராயணத்தையும் உபன்யாஸத்தையும் பக்கத்தில் உட்கார்ந்து ச்ரவணம் செய்வது வழக்கம்.

19 05/06/1975 முதல் 20/07/1975 வரையில் குருவாயூரில் 45 நாட்கள் தங்கியிருந்து ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் 18 ஆவர்த்தி செய்து பஜனம் இருந்தார். இந்த சமயத்தில் அன்ன பிக்ஷையை அறவே தவிர்த்து பொரி, பால் இவைகளை மட்டும் ஆகாரமாக ஏற்று வந்தார். 1963 -ல் முதல் முறையாக குருவாயூருக்குச் சென்றது முதல் அங்கு எவ்வளவு முறை ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் செய்ய முடியுமே அவ்வளவு முறை செய்து வந்திருக்கிறார்.

20. ஸ்வாமிகள், ஸ்ரீமத் பாகவதத்தை 108 முறை ஆவர்த்தி செய்ய வேண்டும் என்ற சங்கல்பத்துடன் மேற்படி சொன்ன 18 ஆர்த்தியையும் சேர்த்து 103 ஆவர்த்தி ஆகியிருந்தது. மீதி உள்ள 5 ஆவர்த்தி திருவல்லிக்கேணியில் 20/07/1975 முதல் 10/08/1975 வரை நடந்தது.

21. 1975 டிசம்பர் 1976 ஜனவரி (மார்கழி மாதம்), ஸ்ரீமத் நாராயணீய பாராயணம் செய்து கொண்டு நாமக்கல்லில் பஜனம் இருந்தார்.

22. விச்வநாத அய்யர் என்ற நெருங்கிய நண்பருடன் 1978 ஏப்ரல் மாதம் முதல் 1979 அக்டோபர் மாதம் வரையில் கொச்சியில் (கேரளா) தங்கியிருந்த சமயம் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணமும் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணமும் செய்திருக்கிறார். இந்த 18 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்திருக்கிறார்.

23. 1980ல் திருத்தணியில் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம் செய்தார்.

24. 1986ல் திருவாலங்காட்டில் நெரிஞ்சிப்பேட்டை ஸ்வாமிகள் மடத்தில் நவராத்திரியின் போது காலையில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணமும் மாலையில் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணமும் மவுனமாக இருந்து கொண்டு செய்தார்.

25. 1987ல் குளித்தலையில் நவராத்திரியில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணமும் ப்ரவசனமும் செய்தார்.

26. 1989 தை புஷ்யத்தில் திருவிடைமருதூரில் மஹாபெரியவாளின் உத்தரவுப்படி ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணமும் ப்ரவசனமும் செய்தார். அதே வருடம் ராம நவமி சமயத்தில் மஹா பெரியவாள் சன்னிதியில் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம் காஞ்சி மடத்தில் செய்தார்.

27. நிறைய ஆஞ்சனேயர் கோயில்களில் (காக்களூர், சுசீந்திரம், மேல்பாடி, காஞ்சீபுரம், அனந்தமங்கலம், ஹைதராபாத், வால்டேர், மாருதி ஆச்ரம், மயிலாப்பூர் முதலிய இடங்களில் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணம் நடந்திருக்கிறது.

28. ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாச்ரம தகப்பனார் வீடு, சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாச்ரம தகப்பனார் வீடு, ப்ரதோஷம் வெங்கட்ராமைய்யர் (யாருடைய விருப்பத்தால் காஞ்சிபுரம் அருகில் உள்ள ஓரிக்கையில் மஹா பெரியவாளுக்கு சதாப்தி மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறதோ) வீடு ஆகியவைகளில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் செய்திருக்கிறார்.

29. மூக பஞ்சசதி 500 ச்லோகங்களையும் காஞ்சீபுரம் காமாக்ஷி அம்பாள் கோயிலில் பல முறை பாராயணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு தை ஹஸ்தத்தின் பொழுது (க்ஷேஷாத்ரி ஸ்வாமிகளின் ஜயந்தி தினம்) பால்குந க்ருஷ்ண ப்ரதமை அன்று மூக பஞ்சசதி 500 ச்லோகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.

30. ஒவ்வொரு வருஷமும் முக்கியமாக கீழ்க்கண்ட சமயங்களில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் விடாமல் செய்வார்.

வைசாக சுத்தம்

ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனை

வ்யாஸ பூஜை ஆரம்பம்

ஆவணி அவிட்டம்

கோகுலாஷ்டமி (மஹா பெரியவாள் சன்னிதி)

விச்வரூப யாத்திரை

நவராத்திரி

க்ருத்திகா சுத்தம் ( குருவாயூரில்)

31. ஒரு சமயம் மஹா பெரியவாள் விஜய தசமியன்று ஆத்ம வித்யையைப் பற்றி நினைக்க வேண்டும் என்று சொன்னதன் பேரில் தன் க்ருஹத்தில் சில வருஷங்கள் விஜயதசமியன்று யாராவது ஒரு வித்வானைக் கூப்பிட்டு ஆத்ம வித்யையை உபன்யாஸம் செய்ய சொல்லி கேட்பார். பழுவூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள். எஸ்.ஆர். க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் போன்றோர்கள் வந்திருக்கிறார்கள்.

32. வள்ளிமலை ஸ்வாமிகளின் சிஷ்யர்கள் எஸ்.வி.எஸ். மணி, ஸாதுராம் ஸ்வாமிகள் போன்றவர்களை க்ருஹத்திற்கு வரவழைத்து வள்ளி கல்யாண உபன்யாஸமும், திருப்புகழ் பஜனையும் அவர்கள் வாயிலாகக் கேட்டிருக்கிறார். 1971ல் வள்ளி மலையிலிருந்து தெற்கில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள (கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்ட) மேல்பாடி என்ற ஊரில் ஆஞ்சனேயர் கோயிலில் ராம நவமி சமயத்தில் ஸ்ரீஸாதுராம் ஸ்வாமிகள் அங்கு தங்கியிருந்த போது நம் ஸ்வாமிகளிடம் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம், ப்ரவசனம், ச்ரவணம் செய்தார்.

33. தான் ப்ரவசனங்கள் செய்து கொண்டு பிறர் உபன்யாஸங்கள் ச்ரவணம் செய்தவர்கள் மிகவும் குறைவே. ஆனால் நம் ஸ்வாமிகளோ மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகள், சேங்காலிபுரம் ஆனந்தராம தீக்ஷிதர், வழுத்தூர் ராஜகோபால சர்மா, கல்லிடைக்குறிச்சி ராமக்ருஷ்ண சாஸ்திரிகள், கரப்பங்காடு வரதாசார்யார், காலடி சுப்ரமண்ய சாஸ்திரிகள், சுந்தரகுமார் ஆகியோரின் உபன்யாசங்களை ச்ரவணம் செய்திருக்கிறார். மயிலாப்பூர் சாயி ஸமாஜத்தில், சுமார் நாற்பது வருடகாலம் ஆஞ்ஜம் நம்பூதிரி மற்றும் அவர் சகோதரர் செய்யும் ஸப்தாஹ பாராயணத்தை ச்வரணம் செய்திருக்கிறார்.

34. ஸ்வாமிகளின் உபன்யாஸம் செய்யும் முறையினால் நிறைய க்ரஹஸ்தர்கள் கூடிய வரையில் சாஸ்த்திர அனுஷ்டானம் செய்யும்படியாக ஏற்பட்டது. ஸ்வாமிகளின் உபன்யாஸம், மிகுந்த மனவேதனையுடன் இருந்த ஒருவரை எப்படி காப்பாற்றியது என்று பார்ப்போம். 1963ல் ஒரு பக்தர் தன் வாழ்வில் ஏற்பட்ட துக்கங்களை எண்ணி மிகுந்த மன வேதனையுடன் மனம் போனபடி நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் திருவல்லிக்கேணி பாண்டுரங்கன் கோயிலைக் கடந்து கொண்டிருந்த போது ஸ்வாமிகளின் உபன்யாஸம் இவர் செவியில் விழுந்தது. அப்பொழுது ஸ்வாமிகள் ஸ்ரீமந் நாராயணீயத்தில் ‘மதிரிஹகுண ஸக்தா பந்த க்ருத் ’ என்ற ச்லோகத்தை (15 வது தசகம் முதல் ச்லோகம்) உபன்யஸித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட மாத்திரத்தில் அந்த பக்தரின் மனச்சோர்வு மறைந்து ஸ்வாமிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் செய்து வந்தார்.

35. ஸ்வாமிகள் ஒரு முறை, சிவராத்திரி சமயத்தில் திருப்பதி, காளஹஸ்தி, திருத்தணி, காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு வரிசையாகச் சென்று ஒவ்வொரு தலத்திலும் ஸ்ரீமத் சுந்தரகாண்ட முழு பாராயணம் செய்திருக்கிறார். ஒரு வருஷம் ஸ்ரீமந் நாராயணீய தினத்தன்று (கார்த்திகை மாதம் 28ம் தேதி) சிவாஸ்தானத்தில் மஹாபெரியவாள் சன்னிதியில் ஸ்ரீமந் நாராயணீய ஸ்தோத்ரத்தை முழுவதும் பாராயணம் செய்ய மஹாபெரியவாள் ச்ரவணம் செய்தார்.

36. ஸ்வாமிகள் கிரஹஸ்த்தாச்ரமத்தில் இருக்கும் போது ஒவ்வொரு வருஷமும் மஹாளய பக்ஷ சமயத்தில் தினம் ஸ்காந்த புராணத்தில் இருக்கும் சேது மாஹாத்மிய அத்யாயங்களை பித்ருக்களின் அனுக்ரஹத்தை முன்னிட்டுப் பாராயணம் செய்து வந்தார்.

37. சிவன் சார் அனுக்ரஹத்துடன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், 18.12.1995 முதல் 01.01.1996 வரையில் 15 நாட்கள் தினம் மத்தியானம் 2.30 முதல் 5.30 வரை மயிலாப்பூரில் ஒரு அன்பர் வீட்டில் செய்தார். இது தான் அவருடைய கடைசி உபன்யாசம். சிவன் சார் முதல் 2 நாட்கள் ஸ்வாமிகளின் உபன்யாசத்தை ச்வரணம் செய்தார்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் நாம ஜெபம், குரு வந்தனம், பூஜை, ஸ்ரீமன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar