Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹா பெரியவாளின் கருணை ஸ்வாமிகளின் ... ஸன்யாஸ ஆச்ரமம் வாங்கிக்கொண்டது
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பூஜ்ய சிவன் சார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

சிவன் சார் என்று தனது சீடர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சதாசிவ சாஸ்திரி 03.10.1904 அன்று பூச நக்ஷத்திரத்துடன் கூடிய புண்ய தினத்தில இவ்வுலகில் அவதரித்தார். காஞ்சி மஹாபெரியவாளை உலகிற்கு ஈன்று அருளிய தெய்வீக பெற்றோர்களே இவரையும் இவ்வுலகிற்குத் தந்தனர்.

சிவன்சாரின் பூர்வீக வாழ்க்கை பற்றி விவரங்கள் பெரிதாக நமக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் இவர் ஏறக்குறைய எப்பொழுதும் மவுனமாகவே இருப்பார். திருவெண்காடு அதிஷ்டானத்தில் பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - காஞ்சி காமகோடி பீடம்) உள்ள நந்தவனம் இவராலேயே போடப்பட்டது. தன் வாழ் நாளில் ஒரு கணிசமான பகுதியை திருவெண்காட்டிலும் கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்திலும் இவர் கழிக்க நேரிட்டது. சங்கர மடத்தில் வாசம் செய்த பொழுது தனக்கு தோன்றிய ஆத்மீக விஷயங்களை தொகுக்க ஆரம்பித்தார்.

இவரால் வெளியிடப்பட்ட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ என்ற புத்தகத்திலிருந்து இவருடைய வேதாந்த கருத்துக்களையும் வாழ்க்கையைப் பற்றி அவருடைய எண்ணங்களையும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். (இந்த புத்தகம் இந்த வெளியீட்டாளர்களான நர்மதா பதிப்பகம், 16/7 ராஜா பாதர் தெரு, தி.நகர், சென்னை - 17 என்ற விலாசத்தில் கட: 04428158171, 04428156006 இன்றளவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது)

‘எது ஆத்மீகம், எது ஆத்மீகம் இல்லை ’ என்ற விஷயத்தை இப்புத்தகம் நன்கு புலப்படுத்துகிறது. மற்றைய பிரசித்தி பெற்ற வேதாந்த புத்தகங்களை போலல்லாமல் ஏணிப்படிகளில் மாந்தர்களை படிப்பவர்கள் தான் மானிட யாத்திரையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

சிவன் சார் ஒரு அதிசயிக்கத்தக்க வாழ்க்கையை நடத்தினார். இவருடைய சீடர்கள் இவரை தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாகவே கண்டனர்.

மிகவும் அத்தியாவசியமான உடலை போஷிக்கும் குளியல். குடி நீர் போன்றவைகளை அறவே துறந்து உயிர் வாழத் தேவையான அனைத்தை மட்டுமே ஏற்றார். மேலும் இவர் எந்த விதமான விளம்பரத்தையும் தவிர்த்து வந்ததுடன் தன்னிடம் போடப்பட்ட நியாயமான சந்தேகங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் விடை தந்தார். சுருங்க சொன்னால் போதிப்பதை விட வாழ்ந்து காட்டியே தன் சீடர்களுக்கு வழிகாட்டினார்.

சிவன்ஸாரை ஸ்வாமிகள் தரிசனம் செய்தது

1991ல் மஹா பெரியவாளின் பூர்வாச்ரம தம்பியும் துறவியுமான சிவன்ஸாரை தரிசனம் செய்யும்படி நேர்ந்தது. ஸ்வாமிகள், சிவன்ஸாரை ‘எனக்காக மஹா பெரியவாள் எடுத்துக் கொண்ட மற்றொரு வடிவம் என்று குறிப்பிடுவது வழக்கம். சிவன் ஸார் எழுதிய ‘ஏணிப்படிகளின் மாந்தர்கள்’ என்ற புத்தகத்தில் ஸ்வாமிகள் காட்டிய ஈடுபாடு ஸ்ரீமத் பாகவதத்தின் மேல் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு சற்றும் குறைந்ததல்ல. (ஸ்வாமிகளின் நித்திய பூஜையில் ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ ப்ரதியும் அடக்கம்) சிவன் ஸாரிடம் ஈடுபட்டிருந்த சில பையன்கள் இவரிடம் சில க்ரந்தங்களைக் கற்றுக் கொள்ளவும், சிவன் ஸார் ஸித்தியடைந்த பிறகு (1996) இவரிடம் பூர்ணமாக ஈடுபடவும் ஏற்பட்டது.

சிவன் ஸார், நம் ஸ்வாமிகளின் மீது தனிப்பட்ட  அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். சிவன்ஸார், ஸ்வாமிகளைப் பற்றி திருவாய்மலர்ந்தருளிய விஷயங்கள் பின் வருமாறு:

1. ‘பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு வைகுண்டத்திலிருந்து விமானம் வரும்’
2. ‘இப்பொழுது இவர்தான் உண்மையான ஸந்நியாஸி’
3. ‘ஏணிப்படிகளில் மாந்தர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குணங்கள் பொருந்தியவர்’
4. ‘அகம்பாவத்தை வென்றவர்’ ஓசத்தியானவர்!! பார்க்க வேண்டியவர்!’
5. ""He is a deserving Guru

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar