Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ண ஜென்மாஷ்டமி முக்கிய ... மந்த்ர புஷ்பம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை
தீபாராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
03:10

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

ப்ரார்த்தனை

(வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

சு’க்லாம்பரதரம் ........ சா ’ந்தயே
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்
(ஓம் பூ: ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்
(வலது காதை தொடவும்.)

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனிதற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ:, ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60


1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’ வேதவராஹ, கல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, .... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்), தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ச்’ராவண மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அஷ்டம்யாம் சு’பதிதௌ, .... வாஸரயுக்தாயாம் (வாரத்தின் பெயர்), ரோஹிணீ நக்ஷத்ரயுக்தாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

கோத்ரோத்பவஸ்ய (பூஜை செய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),.... நக்ஷத்ர யுக்தாயாம்,... ராசௌ ’ ஜாதஸ்ய,.... நாமதேயஸ்ய, தர்மபத்னீ ஸமேதஸ்ய மம ஜன்மாப்யாஸாத் ஜன்மப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபநோதநார்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய, ஆயு:, ஆரோக்ய, ஐச் ’வர்யாணாம் அபிவ்ருத் யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஸமஸ்த மங்களா வாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோபசா’ந்த்யர்த்தம், ஸ்ரீக்ருஷ்ண ப்ரஸாதேன மனோவாஞ்சித ஸகல அபீஷ்டபல ஸித்யர்த்தம், ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (குழந்தைபாக்கியம் வேண்டியவர்கள் மட்டும் இதை சொல்லவும்), ஸ்ரீபாலக்ருஷ்ண பூஜாம் கரிஷ்யே, ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே.

(கையில் உள்ள அக்ஷதையை வடக்கில் போட்டு ஜலத்தால் கைகளை சுத்தி செய்து கொள்ளவும்.) பஞ்சாங்கம் பார்க்கவும்.

ஸ்மார்த்த ஸம்ப்ரதாயப்படி அஷ்டமி திதி அன்றும், வைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி ரோஹிணி நக்ஷத்ரத்திரத்தன்றும், முறையே கோகுலாஷ்டமி/ ஸ்ரீஜயந்தி என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

விக்னேச் ’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)

அகஜானன... உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச் ’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை  கலச ’ பூஜை

கண்டா பூஜை


(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ஸ்ரீ க்ருஷ்ண த்யானம்

(கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி, க்ருஷ்ணர் விக்ரஹத்திற்கு புஷ்பம், அக்ஷதை போட்டு, க்ருஷ்ணரை த்யானிக்கவும்)

ஸ்தன்யம் பிபந்தம் ஜனனீ முகாப்ஜம்
விலோக்யமானம் முஹுராதரேண

ஸ்ப்ருச ’ந்த மன்யம் ஸ்தன மங்குளீபிர்
நமோ யசோ’தாங்க கதம் குமாரம்

வ்ரதாரம்பம் கரிஷ்யே ஸஹம் த்வத்ப்ரஸாதாத் ஜனார்தன
தேவீம் ஸ்வச்சாம்பரதராம் ஸர்வாபரண பூஷிதாம்

ஸ்ரீக்ருஷ்ண வதானம்போஜ நிக்ஷிப்த குசமண்டலாம்
லாலயந்தீம் ப்ரஸந்நாஸ்யாம் கோவிந்தம் பாலகம் முதா

பிபன் வாமஸ்தனம் த்யாயன் ஸ்ப்ருச ’ந்தம் பாணிநாபரம்
விலோக்யமானம் ப்ரமோர்த்ரம் முகம் மாதுர் முஹுர்முஹு

ஸர்வாபரண ஸம்யுக்தம் முக்தாதாம விபூஷிதம்
நூபுரைர் மணிஸஞ்ச்சன்னை: கடிஸூத்ரை  ரலங்க்ருதம்

கஸ்தூரீ குங்குமோபேதை: திவ்யகந்தானுலேபனை:
நவநீத ரஸோத்தாம கந்தவாஸித திங்முகம்

கல்பவ்ருக்ஷ ஸமுத்பூத திவ்யமால்யை  ரலங்க்ருதம்
மந்தஸ்மித லஸத்கண்டம் விலஸந்  மணிகுண்டலம்

முனிப்ருந்தைர் நாரதாத்யை: ச ’க்ராத்யைர் தேவதாகணை
ஸித்தவித்யாதரைர் யக்ஷை: ஸமாவ்ருத மனுத்தமம்

ப்ரஸன்நாலோகனை: ஸ்நிக்தை: வர்த்தயந்தம் சு’பாசு’பம்
அணிமாதி குணோபேதம் ஏவம் த்யாத்வா ப்ரபூஜயேத்

த்யாத்வா சதுர்ப்புஜம் தேவம் ச ’ங்க சக்ர கதாதரம்
பீதாம்பர குணோபேதம் லக்ஷ்மீயுக்தம் விபூஷிதம்

லஸத் கௌஸ்துப சோ ’பாட்யம் மேகச்’யாமம் ஸுலோசனம்
அஸ்மின் பிம்பே (சித்ரபடே) தேவகீ வஸுதேவ
ஸஹித ஸ்ரீபாலக்ருஷ்ணம் த்யாயாமி
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

ஆவாஹனம்

(கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி, புஷ்பம், அக்ஷதைகளை விக்ரஹம் / படத்தின் மீது போடவும்)

ஆவாஹயாமி தேவேச ’ம் ஸ்ரீதரம் ஸ்ரீபதிம் ஹரிம்
பாலரூபதரம் திவ்யம் ஸச்சிதானந்த விக்ரஹம்
தேவகீ வஸுதேவஸஹித ஸ்ரீ பாலக்ருஷ்ணம் ஆவாஹயாமி
(அக்ஷதை, புஷ்பம், ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

தாமோதர நமஸ்தே (அ)ஸ்து பலாநுஜ நமோ நம:
ஸ்வர்ண ஸிம்ஹாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை, புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

புஷ்பாக்ஷத ஸமாயுக்தம் ஏலாகந்த ஸமன்விதம்
பாத்யம் க்ருஹாண தேவேச ’ பக்தாபீஷ்ட ப்ரதாயக
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்காநதி ஸமானீதம் ஸுவர்ண கலச ’ஸ்த்திதம்
அர்க்யம் க்ருஹாண தேவேச ’ வஸுதேவ ப்ரியாத்மஜ
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தாமோதர நமஸ்துப்யம் யமளார்ஜுன பஞ்ஜன
யமுனாஜல ஸம்யுக்தம் க்ருஹாணாசமநீயகம்
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தேவதேவ ஜகந்நாத த்ராஹி மாம் பவஸாகராத்
மதுபர்க்கம் க்ருஹாணேதம் ஸுபத்ராக்ரஜ தே நம:
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(தேன் கலந்த பாலை புஷ்பத்தால் தொட்டு தெளிக்கவும்)

காமதேனோ: ஸமுத்பூதம் தேவர்ஷி  பித்ரு த்ருப்திதம்
பயோ ததாமி தேவேச ’ ஸ்நானாய ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
க்ஷீரேண ஸ்நாபயாமி (புஷ்பத்தால் பால் ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

சந்த்ரமண்டல ஸங்காச ’ம் ஸர்வதேவ ப்ரியம் ததி
ஸ்நாநார்த்தம் தே மயா தத்தம் ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ பாலக்ருஷ்ணாய நம:
தத்னா ஸ்நாபயாமி (புஷ்பத்தால் தயிர் ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

ஆஜ்யம் ஸுராணா மாஹாரம் ஆஜ்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்
ஆஜ்யம் பவித்ரம் பரமம் ஸ்நாநார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: ஆஜ்யேன
ஸ்நாபயாமி (புஷ்பத்தால் நெய் ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

ஸர்வௌஷதி ஸமுத்பன்னம் பீயூஷ ஸத்ருச ’ம் மது
ஸ்நாநார்த்தம் தே ப்ரயச்சாமி க்ருஹ்யதாம் பரமேச்’ வர
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
மதுனா ஸ்நாபயாமி (புஷ்பத்தால் தேன் ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

இக்ஷுதண்ட ஸமுத்பூதம் திவ்யச ’ர்கரயாதுனா
ஸ்நாபயாமி மஹாபக்த்யா ப்ரீதோ பவ க்ருபாம்புதே
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: ச ’ர்க்கரயா ஸ்நாபயாமி
(புஷ்பத்தால் சர்க்கரை ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

ஸ்நானம் பஞ்சாம்ருதைர் யுக்தம் நாளிகேர ஜலைர்யுதம்
க்ருஹாண த்வம் மஹாபாஹோ விச் ’வரூப நமோஸஸ்துதே
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: பஞ்சாம்ருத
ஸ்நானம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்தால் பஞ்சாம்ருதம் ப்ரோக்ஷணம் (அபிஷேகம்) செய்யவும்)

ஸ்நாபயாமி ஸுரச்’ரேஷ்டம் க்ருஷ்ணம் பாலஸ்வரூபிணம்
சு ’த்தோதகேன ச ப்ரீத்யா பயக்லேச ’ வினாச ’னம்
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:, சு’த்தோதக
ஸ்நானம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்தால் சுத்த தீர்த்தம் (அபிஷேகம் செய்யவும்) தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

பீதாம்பரத்வயம் தேவ வனமாலாஞ்ச கௌஸ்துபம்
திவ்யான்யாபரணானிச க்ருஹாண யதுநந்தன
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: வஸ்த்ராணி
ஸமர்ப்பயாமி (வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சநஞ்சோத்தரீயகம்
க்ருஹாண தேவதேவேச ’ யசோ’ தானந்த வர்த்தன
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகந்தம் குங்குமோபேதம் கர்ப்பூராதி ஸமன்விதம்
விலேபனம் ஸுரச்’ரேஷ்ட க்ருஹாண யதுநாயக
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: கந்தான் தாரயாமி
(சந்தனம், குங்குமம் இடவும்)

அக்ஷதாந் தவளாந் திவ்யாந் முக்தாபல ஸமப்ரபான்
வாஸுதேவ க்ருஹாண த்வம் நமஸ்தே பக்தவத்ஸல
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம: அக்ஷதான்
ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்.)

ஜாதீசம்பக புஷ்பாத்யை: கேதகீ மல்லிகாதிபி:
கரவீரை: பாரிஜாதை: பூஜயாமி ப்ருதக் ப்ருதக்
ஸ்ரீபாலக்ருஷ்ணாய நம:
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பமாலை / புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)

அங்க பூஜை

(புஷ்பம், துளஸீதளம், பாரிஜாதப்பூ இவைகளால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் க்ருஷ்ணாய நம:    பாதௌ    பூஜயாமி (கால்)
ஓம் ஸங்கர்ஷணாய நம:    குல்பௌ    பூஜயாமி (கணுக்கால்)
ஓம் கோபாலாய நம:    ஜானுநீ    பூஜயாமி (முட்டி)
ஓம் ச ’கடாஸுர பஞ்ஜநாய நம:     ஊரூ    பூஜயாமி (தொடை)
ஓம் வாஸுதேவாய நம:    குஹ்யம்    பூஜயாமி (மர்மம்)
ஓம் ஹரயே     நம:    கடிம்     பூஜயாமி (இடுப்பு)
ஓம் யமுனா விஹாரிணே நம:    ஜடரம்    பூஜயாமி (வயிறு)
ஓம் வஸுதேவாத்மஜாய நம:    நாபிம்    பூஜயாமி (தொப்புள்)
ஓம் சக்ராயுதாய    நம:    பாஹூன்    பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் வனமாலாதாரிணே நம:    ஸ்கந்தௌ    பூஜயாமி (தோள்)
ஓம் பலபத்ரானுஜாய நம:     முகம்    பூஜயாமி (முகம்)
ஓம் கம்ஸாரயே நம:    கர்ணௌ    பூஜயாமி (காதுகள்)
ஓம் கஸ்தூரீ திலகாஞ்சிதாய நம:    பாலம்    பூஜயாமி (நெற்றி)
ஓம் புண்டரீகாக்ஷாய நம:    நேத்ரே    பூஜயாமி (கண்கள்)
ஓம் கோபலக்ருஷ்ணஸ்வாமினே நம: சி’ர:    பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வ தேவாத்மகாய நம: ஸர்வாண்யங்கானி     பூஜயாமி (முழுவதும்)   

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 6. கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை »
temple news
கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். ராமாவதாரத்தில் அவரால் விடப்பட்ட சில அரும்பெரும் ... மேலும்
 
முக்கிய குறிப்புகள்:செந்தாமரைக்கண்கள், நான்கு திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை முதலிய ஆயுதங்கள், ... மேலும்
 

மந்த்ர புஷ்பம் அக்டோபர் 31,2018

மந்த்ர புஷ்பம்ஸ்ரீ க்ருஷ்ண ஸர்வலோகேச ’ நாநாபுஷ்பை: ஸுவாஸிதம் புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி ஸர்வலோக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar