Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிவேதன மந்த்ரங்கள் நவராத்திரி நாமாவளி
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 12. நவராத்திரி பூஜை
விக்னேச்வர உத்யாபனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

கும்ப ஸ்த்தாபனம்

ஒரு சதுரமான மேடை மீது பிந்து, முக்கோணம், ஷட்கோணம், அஷ்டதளம், மூன்று வட்டங்கள், பூஜா சக்கரம் என்ற வரிசையில் உள்ள ஸ்ரீசக்ரத்தை வரைய வேண்டும். அதன் மீது நெல் அல்லது அரிசியைப் பரப்பி, புது நூல் சுற்றி, சந்தனம் அக்ஷதை இவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தின் உள்ளும் புறமும் சாம்பிராணி தூபம் காட்டி, அரிசி மீது அமர்த்தி, அதில சுத்தமான தீர்த்தத்தை நிரப்ப வேண்டும். அதில் சந்தானம், புஷ்பம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்த்து கும்பரத்தினம் சேர்த்து, மாவிலைக் கொத்து, தேங்காய், கூர்ச்சம் இவைகளை வைக்கவும். பிறகு சிவப்பு வஸ்திரத்தைச் சுற்றவும். பிறகு “இமம் மே வருண ” என்ற மந்த்ரத்தால் வருணனைத் தியான ஆவாஹனம் செய்து ஷோடசோ ’ பசார பூஜை செய்ய வேண்டும். அந்த கும்பத்தின் மீது தேவியின் பிரதி மையை வைத்து ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும்.

ப்ராணப்ரதிஷ்டை

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

தியானம்

மஹிஷக்னீம் மஹாதேவீம் குமாரீம் ஸிம்ஹவாஹநாம்
தாநவாம்ஸ் தர்ஜயந்தீம் ச ஸர்வகாமதுகாம் சி’வாம்
த்யாயாமி மனஸா துர்காம் நாபிமத்யே வ்யவஸ்த்திதாம்
ஆகச்ச வரதே தேவி தைத்ய தர்ப்ப நிபாதினி
பூஜாம் க்ருஹாண ஸுமுகி நமஸ்தே ச ’ங்கரப்ரியே
ஸர்வ தீர்த்தமயம் வாரி ஸர்வதேவ ஸமன்விதம்
இமம் கடம் ஸமாகச்ச திஷ்ட்ட தேவகணைஸ்ஸஹ
துர்கே தேவி ஸமாகச்ச ஸாந்நித்யமிஹ கல்பய
அஸ்மின் பிம்பே / கலசே ’ஸ்ரீ துர்கா, லக்ஷ்மீ
ஸரஸ்வதீம் த்யாயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹனம்

ஏஹி துர்கே மஹாபாகே ரக்ஷார்த்தம் மம ஸர்வதா
ஆவாஹயாம்யஹம் தேவி ஸர்வகாமார்த்தஸித்தயே
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவீம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

அநேகரத்ன ஸம்யுக்தம் நாநாமணிகணான்விதம்
கார்த்தஸ்வரமயம் திவ்யமாஸநம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கங்காதி ஸர்வதீர்த்தேப்யோ மயாப்ரார்த்தனயா (ஆ) ஹ்ருதம்
தோய மேதத் ஸுகஸ்பர்ச ’ம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: பாத்யம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நிதிதாம் ஸர்வரத்னாநாம் த்வமனர்க்ய குணாஹ்யஸி
ஸிம்ஹோபரி ஸ்த்திதே தேவி க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: அர்க்யம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கர்ப்பூரேண ஸுகந்தேன ஸுரபி ஸ்வாத சீ ’தலம்
தோயமாசமநீயார்த்தம் தேவி த்வம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம: ஆசமனீயம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மந்தாகின்யா:ஸமாநீதை: ஹேமாம்போருஹ வாஸிதை:
ஸ்நானம் குருஷ்வ தேவேசி’ ஸலிலைச்’ச ஸுகந்திபி:
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
ஸ்நாபயாமி (புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

பட்டகூலயுகம் தேவி கஞ்சுகேன ஸமந்விதம்
பரிதேஹி க்ருபாம் க்ருத்வா துர்கே துர்கதிநாசி’னி
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ஸ்வர்ண ஸூத்ரமயம் திவ்யம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா
உபவீதம் மயா தத்தம் க்ருஹாண பரமேச்’வரி

ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகண்ட்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமநோஹரம்
விலேபனம் ச தேவேசி’ சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
ஸௌபாக்யம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்)

ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
குங்குமம் ஸமர்ப்பயாமி (குங்கமம் இடவும்.)

ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
கஜ்ஜலம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்.)

ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணம் அணிவிக்கவும்)

அக்ஷதாந்நிர்மலான் சு ’த்தான் முக்தாமணி ஸமன்விதான்
க்ருஹாணேமான் மஹாதேவி தேஹி மே நிர்மலாம் தியம்
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம; அக்ஷதான்
ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்.)

பத்ம ச ’ங்கஜ புஷ்பாதி ச ’தபத்ரைர் விசித்ரிதாம்
புஷ்பமாலாம் ப்ரயச்சாமி க்ருஹாண த்வம் ஸுரேச்’வரி
ஸ்ரீதுர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ தேவ்யை நம:
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 12. நவராத்திரி பூஜை »
உலக மாதாவான அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம், வடநாட்டில், குறிப்பாக வங்காளத்தில் இதனை ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் ... மேலும்
 
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)ஓம் துர்க்காயை        நம: பாதௌ       ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar