Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 23. பீஷ்மாஷ்டமி
பீஷ்மாஷ்டமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

பீஷ்மப் பிதாமகர் தன் விருப்பப்படி மரணமடையும் வரத்தைப் பெற்றவர். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் உடல் முழுவதும் காயங்கள் அடைந்த அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர்விடத் தீர்மானித்து அம்புப் படுக்கையில் சயனத்திருந்தார். பாண்டவர்களும் கவுரவர்களும் அவர் பக்கம் தொழுது நிற்கின்றனர். கிருஷ்ணர் பரமாத்மா அவருக்கு மகாவிஷ்ணுவாக தரிசனம் தருகிறார். அப்பொழுது சொல்லப்பட்டதே விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ரத சப்தமி வரை காத்திருந்த மறுநாள் அஷ்டமியன்று உயிர் துறந்தார். பிதாமகர். அதனால் பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பீஷ்மாஷ்டமியன்று தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும். கங்கையின் அருளும் கிடைக்கும்.

(பீஷ்மாச்சாரியர் நித்ய ப்ரம்மசாரி. எனவே, அவருக்கு ஸந்ததியில்லை. ஆகவே, பீஷ்மாஷ்டமியன்று தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் அவருக்கு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி அர்க்யம் விட வேண்டும். இதனால் கடந்த ஒரு வருஷத்திய பாபங்கள் நீங்கும். இதை அனுஷ்டிக்காவிட்டால் ஒரு வருஷத்திய புண்ணியங்கள் நீங்கிவிடுமென்றும் புராணங்கள் கூறுகின்றன.)

அர்க்ய மந்த்ரம்

(வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.)

வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜன்ம ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணே
பீஷ்ம: சாந்தனவோ வீர: ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய:
ஆபி ரத்பி ரவாப்நோது புத்ரபௌத்ரோசிதாம் க்ரியாம்
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

வஸூனா மவதாராய சந்தனோ ராத்மஜாய ச
அர்க்யம் ததாமி பீஷ்மாய, ஆபால ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar