Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சீசனுக்கு தயாராகுமா குமுளி ... பெண்ணால் சபரிமலையில் திடீர் பதட்டம்: போராடிய பக்தர்கள் மீது வழக்கு பெண்ணால் சபரிமலையில் திடீர் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பலத்த பாதுகாப்புடன் சபரிமலை நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பலத்த பாதுகாப்புடன் சபரிமலை நடைதிறப்பு

பதிவு செய்த நாள்

06 நவ
2018
02:11

சபரிமலை: சித்திரை திருநாள் அவிட்டம் மகாராஜா பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலையில் இன்று (5ம் தேதி ) மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. பிரச்சனை ஏற்படுத்துவதைத் தடுக்க  144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட் உத்தரவை அடுத்து கடந்த மாதம் ஐப்பசி மாத திறப்பை முன்னிட்டு அங்கு பரபரப்பும் பதட்டமும்  ஏற்பட்டது. சபரிமலைக்கு செல்ல விடாமல் பெண்களை தடுத்ததாக கேரள போலீசார், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று 5ம் தேதி ( திங்கட்கிழமை)  சித்திரை திருநாள் அவிட்டe் மகாராஜா பிறந்த நாளை முன்னிட்டு நடை திறக்கப்பட்டது. நாளை 6ம் தேதி ( செவ்வாய்கிழமை) இரவு 10.30 மணிக்கு மூடப்படும். இதற்கிடையில் கோயிலுக்குள்  அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால் உடனடியாக கோயில் நடை சாத்தப்படும் என தலைமை நம்பூதிரி மிரட்டல் விடுத்துள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த  கேரள ஐகோர்ட், சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது. கோயில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. வாகனங்களை  சேதப்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்,  2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் பெண் போலீசார்:  சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக, சன்னிதானத்தில் நேற்று, பெண் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்காக, 50  வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். பதற்றமான சூழல் நிலவுவதால், கமாண்டோ வீரர்கள் உட்பட, 2,000 போலீசார், சபரிமலையில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும்  அனுமதிக்கலாம் என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐப்பசி மாத நடை திறப்பின் போது, பக்தர்கள் போராட்டம் நடத்தியதால், பதற்றம் நிலவியது.  இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.

பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில், ஐப்பசி மாத பூஜையின் போது ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்தில் வைத்து, தற்போது முன்கூட்டியே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று  முன்தினம் மாலை முதல், பக்தர்கள் வரத் துவங்கினர். அவர்கள் இலவங்கல்லில் தடுக்கப்பட்டனர். ஊடகங்களுக்கு தடைநேற்று காலை முதல், ஊடகங்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட்டன.  ஆனால், பம்பை ஆற்றை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்களின் வாகனங்கள், நிலக்கல்லில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் எருமேலி, திருவனந்தபுரம், கொல்லத்தில், பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட்டனர். காலை, 11:15 மணிக்கு, நிலக்கல்லில்  இருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மதியம், 12:40 முதல், பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஹிந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வந்த  கார், பம்பைக்கு அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அரசு பஸ்சில் பம்பை வந்தனர்.

பம்பையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டனர். இருமுடி இல்லாதவர்களும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சன்னிதானத்தில் கூட்டமாக நிற்பது, ஊடகங்களிடம் பேசுவது தடை  செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு காலம் போல, கமாண்டோ வீரர்கள் உட்பட, 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக,  சன்னிதானத்தில் பெண் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக, 50 வயதுக்கு மேற்பட்ட, 100 பெண் போலீசார், நிலக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.  இவர்களில், 30 பேர், நேற்று காலை

சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சபரிமலை சன்னிதானத்தில் நேற்று, மினி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது போன்ற சூழல் நிலவியது. பக்தர்களுக்கு அறைகள்  வழங்கப்படவில்லை. கூட்டமாக நின்று, பக்தர்கள் பேச முடியவில்லை. தந்திரி, மேல்சாந்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது போல, அவர்களது அறைக்கு முன், போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.  ஜாமர் கருவி மூலம், அவர்களது மொபைல் போன்கள் செயல் இழக்க வைக்கப்பட்டன. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தந்திரி, மேல்சாந்தியை காண, அனுமதி மறுக்கப்பட்டது.  நேற்று மதியத்துக்கு பின், பக்தர்கள் அதிக அளவில் சன்னிதானம் வந்தனர். மாலை, 5:30 மணிக்கு நடை திறந்தது. பரபரப்பான சூழலில் போலீஸ் வளையத்துக்குள் நின்று, பக்தர்கள் தரிசனம்  நடத்தினர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar