Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில், ... காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரர் புதிய உற்சவர் சிலை வந்த பின் தான் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2018
02:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த, பழைய உற்சவர் சிலை, சிதிலம் அடைந்ததாக கூறி, புதிய சிலை செய்யப்பட்டது.இந்த சிலை செய்ததில், தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.

கோவில் ஸ்தானிகர்கள், செயல் அலுவலர் உட்பட ஒன்பது பேர் மீது, வழக்கு பதிந்தனர். புதிய சிலையை ஆய்வு செய்த போலீசார், அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என, தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம், புதிய உற்சவர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு போலீசார், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி முன் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப் படுகிறது.தற்போது, நீதிமன்ற பாதுகாப்பில் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளி அன்று நடக்கும் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை.

அடுத்தாண்டு, பொங்கல் தினத்தன்று, திம்மசமுத்திரம் பார் வேட்டை உற்வசம் நடைபெறும். இத்திருவிழாவிற்கு முன், புதிய சிலை காஞ்சிபுரம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி கூறியதாவது:கும்பகோணத்திற்கு கொண்டு சென்ற புதிய உற்சவர் சிலையை, மீண்டும் ஏகாம்பரர் கோவிலில் ஒப்படைத்தால் தான், உற்சவ காலங்களில், சுவாமி புறப்பாடு நடைபெற வாய்ப்பு உள்ளது.பழைய சிலை சிதிலம் அடைந்து விட்டதால் வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar