Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1, 2, ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு வாங்கும் யோகம் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா

பதிவு செய்த நாள்

12 நவ
2018
01:11

நிழல் கிரகமான கேது 3-ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவரால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த முயற்சியில் முன்னேற்றம் காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாரான நிலையில் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது அவசியம். இருப்பினும் குருவின் பார்வையால் பணவரவு சீராக இருக்கும்.  எதிரிகளின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.

சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஆடம்பரச் செலவை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிக்கவும். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். புதனும் தற்போது சாதகமற்ற இடத்தில் உள்ளார். அதனால் முயற்சிகளில் தடைகளைச் சந்திக்கும் நிலை உருவாகலாம். உடல்நலனில் அதிருப்தி ஏற்படலாம். அவர் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். சிலருக்கு பொருள் இழப்பும் ஏற்படலாம்.

குடும்பத்தில் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்புண்டாகும். கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிச.2,3ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.17, டிச.13,14,15ல்  உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.29,30ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
டிச.7 க்கு பிறகு புதனால் அக்கம் பக்கத்தினர் வகையில் பிரச்னை வரலாம்.  பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  தனியார் துறையில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம். சகபெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நவ.29,30, டிச.1ல் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக கிடைக்கும். எதிரிகளால் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். டிச.4,5,8,9,10ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் நவ.21,22ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு செயலில் தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகள் குறுக்கிடலாம். தொழில்ரீதியான பயணம் மூலம் சற்று ஆறுதல் கிடைக்கும்.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். ராசி நாதனான செவ்வாய் தற்போது 4-ம் இடத்தில் உள்ளதால் திடீர் பணஇழப்பை சந்திக்கலாம் கவனம். தெரியாத நபரோடு நெருங்கி பழக வேண்டாம். நவ.18,19,20ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் மெத்தனமாக இருப்பது கூடாது. அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நன்மை தரும். விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் குடும்ப  நலனுக்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வையால் மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சுமாராக இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். டிச.11,12ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: நவ.21, 22, 23, 24, 29, 30, டிச.1, 2, 3, 6, 7, 11, 12
* கவன நாள்: நவ.25, 26சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6, 7
* நிறம்: நீலம், சிவப்பு

* பரிகாரம்:
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் விளக்கு
● தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை
● சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar