Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத வருமானம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) கையில் பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) கையில் பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

12 நவ
2018
01:11

இந்த மாதம் கேது 11-ம் இடமான மகரத்தில் உள்ளார். இதனால் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்விக்காரகனாகிய புதன் தற்போது வக்கிரம் அடைந்து 8-ம் வீடான துலாமில் இருக்கிறார். எதிர்பார்ப்பு நிறைவேறும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். ஆனால் டிச.8ல் புதன் வக்கிர நிவர்த்தி அடைந்து விருச்சிகத்திற்கு செல்கிறார் இது சுமாரான இடம். மனதில் வேதனை வரலாம். வீண் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.

சுக்கிரன்  மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். குருபகவானாலும் நற்பலன் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கி நிற்கும். அவர்கள் மூலம் எதை தொடங்கினாலும் அந்த முயற்சி சிறப்பாக அமையும். ஆடம்பர. வசதிகள் பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ.18,19,20ல் சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். நவ.25,26ல் உறவினர்கள்  வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.11,12ல் அவர்களின் வருகையால் நன்மை உண்டாகும்.

பணியாளர்களுக்கு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பு கிடைக்கும் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். டிச.8,9,10ல் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.  கோரிக்கைகளை டிச.7க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு புதனால் வீண்பிரச்னையைச் சந்திக்க நேரலாம் கவனம்.  

வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல வளர்ச்சி பெறும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். எதிரிகளால் மறைமுகப் பிரச்னை குறுக்கிடலாம். நவ.17,21,22 டிசம்பர்13,14,15ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  நவ.29,30, டிச.1ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.

கலைஞர்கள் பெண்களின் ஆதரவால் உயர்ந்தநிலைக்கு முன்னேறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனையே பெறுவர். வீண்அலைச்சல், கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆனால் டிச.7க்கு பிறகு  சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம்.   

விவசாயிகள் எதிர்பார்த்தபடி விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். டிச.7க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். பெண்களுக்கு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தினர், பெரியோர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். பிள்ளைகளின் நற்செயல் கண்டு பெருமை கொள்வீர்கள். நவ.23,24ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.   சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்படைவர். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். டிச.7க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.

* நல்ல நாள்: நவ.18, 19, 20, 23, 24, 29, 30, டிச.1, 2, 3, 8, 9, 10, 11, 12
* கவன நாள்: டிச.4, 5 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 4, 7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்  

* பரிகாரம்:
● தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று முருகனுக்கு அபிேஷகம்
● திங்களன்று சிவனுக்கு வில்வ மாலை

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar