Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடந்ததை எண்ணி வருந்தாதே முருகனின் முற்பிறவி ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேலுண்டு வினையில்லை.....மயிலுக்கு பயமில்லை...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
05:11

அறுபடை வீடு கொண்ட திருமுருகா- திருப்பரங்குன்றம் : ஆறுபடை வீடுகளில் முதல்தலம் திருப்பரங்குன்றம். தெய்வானை- முருகனின் திருமணத்தலம் இது. பூதங்களிடம் சிக்கிய புலவர்களை மீட்க நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடலை இங்கு பாடினார். முருகனின் வேலால் வெளிப்பட்ட காசிச்சுனை மலை மீது உள்ளது. மணக்கோல முருகனாக அருள்வதால் வழிபடுவோருக்கு நல்ல மணவாழ்வு அமையும்.

திருச்செந்துார்: இரண்டாம் படைவீடான இது கடற்கரைத் தலம். சூரபத்மனின் வரலாற்றை வியாழபகவான் மூலமாக கேட்டறிந்தார் முருகன். வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு உதவினர். சுகப்பிரம்ம முனிவர் இங்கு வழிபட்டு பலன் பெற்றார். முருகன் வேலினால் உண்டாக்கிய கந்தபுஷ்கரணி நாழிக்கிணறு தீர்த்தம் சிறப்பானது.

பழநி: மூன்றாம் படைவீடு பழநி. திருஆவினன்குடி என்பது புராணப்பெயர். சூரபத்மனின் குருநாதரான இடும்பாசுரன், பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரின் சீடராக இருந்தான். அவனால் காவடியாக சுமந்து வரப்பட்ட சிவகிரி, சக்திகிரி மலைகளே பழநியில் இருக்கின்றன. இதனால் காவடி வழிபாடு பிரசித்தம். முருகன் ஆண்டிக் கோலத்தில் அருள்கிறார்.

சுவாமிமலை: ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலிட்டார் முருகன். மந்திரத்தின் பொருள் தனக்கும் தெரியாதது போல சிவன் நடிக்க, முருகன் தன் தந்தைக்கும் அதன் பொருளை எடுத்துச் சொன்னார். இதனால் தகப்பன் சுவாமியாக சுவாமிமலையில் அருள்கிறார். மாணவர்கள் வியாழனன்று இங்கு வழிபட படிப்பில் சிறந்து விளங்குவர்.

திருத்தணி: மலைகளில் சிறந்தது தணிகை மலை என்கிறது கந்த புராணம். திருச்செந்துாரில் சூரனுடன் போர் செய்த முருகன், இங்கு வந்து கோபம் தணிந்தார். குறமகளான வள்ளியை காதல் மணம் புரிந்த தலம் இது. புராண காலத்தில் செருத்தணி என வழங்கப்பட்ட இத்தலம் திருத்தணியாக மாறியது. செருத்தணி என்றால் கோபம் தணிந்த இடம் என பொருள்.

சோலைமலை: கனிந்தபழம் உதிரும் சோலை நிறைந்த மலை சோலைமலை. இங்கு மும்மூர்த்தியாக இருந்து முருகன் உலகத்தை இயக்குவதாக திருப்புகழ் குறிப்பிடுகிறது. நாவல் மரத்தடியில் அவ்வையார் முன் சிறுவனாக வந்த முருகன் திருவிளையாடல் புரிந்தார். ஆறாவது படைவீடான இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar