Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் ... திருப்பரங்குன்றம், முருகனுக்கு சாந்தாபிஷேகம் திருப்பரங்குன்றம், முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பினராயி பிடிவாதம்; ஐயப்ப பக்தர்கள் துயரம்!
எழுத்தின் அளவு:
பினராயி பிடிவாதம்; ஐயப்ப பக்தர்கள் துயரம்!

பதிவு செய்த நாள்

16 நவ
2018
04:11

சபரிமலை : மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில், இன்று 16 ல்,
மாலை திறக்கப்பட உள்ள நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயனின் பிடிவாதம், பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் என பக்தர்கள் அஞ்சுகின்றனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆண்டு தோறும் ஒரு கோடி பேர் வரை தரிசனம் செய்கின்றனர். இதில் 40 சதவிகித்தினர் தமிழக பக்தர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரின் பிடிவாதத்தால், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டின் இயலாமையால், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, பெரும் குழப்பங்களுட்ன கோயில் திறக்கப்படுகிறது. ஏன் விலக்கு கேட்கவில்லை

உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களை னுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நாள் முதல், அதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வந்தார். பினராயி. தமிழகம் தொடர்பான முல்லைப்பெரியாறு, பிறமத வழிபாட்டு இடங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதையும் அமல்படுத்தாத பினராயி, இதில் மட்டும் உறுதியாக இருந்தார்.

போராட்டங்கள் நடந்தன; பக்தர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இது வரை இல்லாத அளவிற்கு 49 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை 2019 ஜன., 22 விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பக்தர்களை மகிழ்வடைய செய்துள்ளது. ஏனெனில், பெரும்பாலும் மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வராமலேயே தள்ளுபடி செய்யப்படும். உச்ச நீதிமன்றம் மகரவிளக்கு சீசன் முடிந்த பிறகு தான் விசாரிக்கிறது.

தேவசம் போர்டு, அது வரை தீர்ப்பை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு கேட்டிருக்கலாம். முதல்வரின் கட்டுப்பாட்டில் தேவசம் போர்டு இருப்பதால், அது நடக்கவில்லை.

இதே கோரிக்கையை பக்தர்கள் தரப்பு அளித்த போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பதறும் பக்தர்கள் இதனிடையே ரஹானா பாத்திமா, ஸ்வீட்டி மேரி போன்ற போராட்ட பெண்கள் மீண்டும் வந்து, சபரிமலை போர்க்களம் ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்துடன், பா.ஜ., காங், கட்சிகள் ஜன., 22 வரை தீர்ப்பை அமல்படுத்த அவசரப்பட வேண்டாம் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தன.

நேற்று (நவம்., 15ல்) நடந்த சர்வகட்சி கூட்டத்தில் அந்த கருத்தை ஏற்காத முதல்வர், பெண்களுக்கு தனி நாட்கள் ஒதுக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 800 பெண்கள், போலீஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருப்தி தேசாய் என்ற பெண், 7 பெண்களுடன், நவ., 17ல் சன்னிதானம் வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படி அரசு நிர்வாகம், போராட்ட பெண்களால், பிரம்மச்சாரியாக ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலையின் ஐதீகம் மீறப்படுவது பக்தர்களிடையே பதட்டத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனிதம் காக்க என்ன செய்யலாம்

இந்து மத நம்பிக்கையில்லாத பினராயி விஜயன், தெய்வ நம்பிக்கையுள்ள மக்களுக்கும் தான் முதல்வர். தனது கொள்கைகளை காட்சியோடு வைத்து விட்டு, சபரிமலையின் புனிதம் காக்க அவர் என்ன செய்திருக்கலாம்....?

1. தேவசம் போர்டு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கலாம்.
2. மறு சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காட்டி, தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, 2019 ஜன, 22 வரை அரசு விலக்கு கேட்டிருக்கலாம்.
3. பெருவெள்ளத்தால் பம்பை, சபரிமலை பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை சுட்டிக்காட்டி பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய இயலாது என அவகாசம் கேட்டிருக்கலாம். (இது தான் உண்மை; அங்கு பெண்களுக்கு எந்த வசதியும் இல்லை)
4. பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனு ஏற்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு வரும் பெண்களை தடை செய்த 1991 ஐகோர்ட் தீர்ப்பை காட்டி இந்த சீசனுக்கு மட்டுமாவது தடுக்கலாம்.போராட்ட பெண்கள் நீதிமன்றம் சென்றால், எல்லாவற்றிகும் மேலாக, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை காக்க, நீதிமன்றத்தில் அரசு மன்னிப்பு கேட்கலாம்!

அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பது எல்லாம் புதிதல்ல; அவ்வப்போது நடந்து வருகிறது. பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தந்து சன்னிதானத்திற்கு அழைத்து
செல்வதை விட, பிரச்னையின் தீவிரத்தை சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி பம்பையில் இருந்து திருப்பி அனுப்பலாம்.

ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு பெண்களுக்கு தனிநாள், நேரம் ஒதுக்கலாமா என்று இந்து கோயிலின் ஐதீகத்தை அடியோடு சாய்க்க இருக்கிறார் பினராயி.2019 ஜன., 22 மறுஆய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, எப்படியாவது இளவயது பெண்களை தரிசிக்க வைத்தால், அது தங்களுக்கு நிரந்தர வெற்றியை தரும் என்ற கோணத்தில் கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது. இதனால் இந்து மத பக்தர்கள் பெரும் துயரமடைந்துள்ளனர்.

* ஒழுக்கம் தரும் யாத்திரை:

ஐயப்ப பக்தர்களே.... நாளை (நவ., 17) கார்த்திகை முதல் தேதி, மாலை அணிந்து, விரதமிருந்து ஐயப்ப சுவாமியை காணச் செல்லுங்கள். ஆண்களுக்கான புனித யாத்திரை தலம் சபரிமலை என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் திருப்தி அளித்து, வாழ்வு
ஒழுக்கம் போதிக்கும் யாத்திரை இது போல் வேறு இல்லை.

இதுவரை அங்கு பெண்களுக்கே அனுமதி இல்லை என்று நடக்கும் பொய் பிரசாரத்தை முறியடிக்க, உங்கள் வீட்டில் உள்ள பத்து வயதிற்குட்பட்ட, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களையும் அழைத்து செல்லுங்கள்:நடை திறந்திருக்கும் நாட்கள்: நவ., 16 - டிச., 27
டிச., 30 - ஜன., 20மண்டல பூஜை: டிச., 27மகர விளக்கு: ஜன., 14

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar