Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து 6ம் நாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பத்மாவதி தாயார் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
திருச்சானூர் பத்மாவதி தாயார் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

13 டிச
2018
11:12

திருப்பதி: திருச்சானுார், பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று, பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு அடைந்தது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், கடந்த ஒரு வாரமாக, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வந்தது.

ஒன்பதாம் நாளான நேற்று, தாயாருக்கு பஞ்சமி தீர்த்தம் நடந்தது. அதை முன்னிட்டு, தாயார், மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், தாயாரும், சக்கரத்தாழ்வாரும், பத்மசரோவரம் திருக்குளக்கரையில் ஏற்படுத்தியுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினர். ஏழுமலையான் அனுப்பிய சீர்வரிசைகள், தாயாருக்கு கிடைத்த பின், அவருக்கு ஸ்நபன திருமஞ்சனம் துவங்கியது. பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவற்றை திருமலை ஜீயர்கள் எடுத்துத் தர, தாயாருக்கு, அர்ச்சகர்கள் அபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.அதன்பின், திருமலையிலிருந்து ஏழுமலையான் அனுப்பிய, தங்க காசுமாலையை, தாயாருக்கு அணிவித்தனர். திருமஞ்சனத்தின் போது, தாயாருக்கு பலவித உலர்பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் அணிவிக்கப்பட்டன. திருமஞ்சனம் முடிந்த பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தாயார், பத்மசரோவரத்தில், 1,000 இதழ் உடைய, தாமரை மலர் மீது அவதரித்த தினம், சுக்லபட்ச கார்த்திகை பஞ்சமி தினம்.அதனால், அந்த நாளில், தாயாருக்கு பஞ்சமி தீர்த்தம் நடத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள், திருக்குளத்தில் புனித நீராடினர்.திருச்சானுார் பத்மாவதி தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவிலிருந்து தாயாருக்கு பட்டு வஸ்திரம், தங்க காசுமாலை, கும்ப ஆரத்தி, மங்கல பொருட்கள், பரிமள கலவை, பிரசாதங்கள் உள்ளிட்டவை, யானை மீது, திருமலை திருப்பதிக்கு எடுத்து வரப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar