Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குடும்பத்தில் குதூகலம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அபார ஆற்றல்
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) அபார ஆற்றல்

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:12

இந்த மாதம் புதன் டிச.29 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். அதன்பின் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. இது தவிர சுக்கிரன்  ஜன.2 முதல் நன்மையளிப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் உள்ள பெரியோர்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். சூரியன் 7-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் நன்மை தர இயலாதவராகிறார்.

குடும்பத்தில் சுக்கிரனால் ஜன.1 வரை பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.  மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதனால் மாத முற்பகுதியில் முயற்சி வெற்றி அடையும்.  திருமணம் போன்ற சுபவிஷயங்களில் பேச்சு நடக்கும். உங்களின் ஆற்றல் மேம்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். டிச.29க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிச.18,19 ஜன.14ல்  உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.29,30ல் அவர்கள் வகையில் வீண்பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.23,24ல் சகோதர வழியில் பணஉதவி  கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த மாதத்தை பொறுத்தவரை புதன் டிச.28 வரை 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிறப்பான காலமாக அமையும். இந்த காலகட்டத்தில் சிலர் பதவி உயர்வு  காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். அதன் பின் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். டிச.16,17, ஜன.12,13 ல் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக கிடைக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் அதிக லாபத்தை பெறுவர். குடும்பத்திலுள்ள மூத்த பெண்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவும். கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பர். டிச.20,21,22,25,26ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் ஜன.2,3,4ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
டிச.28-க்கு பிறகு நமக்கு ஏது எதிரி என அசட்டையாக இருக்காதீர்கள்.  மறைமுக பகைவர்களால் இடையூறு வரலாம்.
கலைஞர்கள்  சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஜன.1க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். மறைமுகப் போட்டிகள் அதிகமிருக்கும். தொண்டர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு கீரை, காய்கறி, கிழங்கு வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் டிச.28க்கு பிறகு அதிக உழைப்பு தேவைப்படும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு அடிக்கடி செல்வர். வேலைக்கு செல்லும் பெண்கள்  டிச.28க்கு பிறகு விட்டுக் கொடுத்து போகவும். டிச.27,28ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருள் வரப் பெறலாம். ஜன.7,8 சிறப்பான நாட்களாக அமையும்.

* நல்ல நாள்: டிச.16, 17, 18, 19, 23, 24, 27, 28, ஜன.2, 3, 4, 5, 6, 12, 13, 14
* கவன நாள்: ஜன.7, 8, 9 சந்திராஷ்டமம்  
* அதிர்ஷ்ட எண்: 1, 5
* நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம்
● வெள்ளியன்று துர்க்கை வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar