Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான மாதம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:12

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 6ல் இருக்கும் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். அக்கம்பக்கத்தினர் தொல்லை மறையும். பண வரவு கூடும். குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்கலாம். ஆடை, ஆபரணம் சேரும்.   

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதிப்பு மரியாதை உயரும். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சு நடந்தேறும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  டிச.23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜன.2,3,4ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.27,28ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.  அவர்களால் பொன், பொருள் கிடைக்கும். டிச.29க்கு பிறகு கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  மனைவி வகையில் தொல்லை வரலாம். அக்கம் பக்கத்தினரால் பிரச்னை வரலாம்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு உயரும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள்  நல்ல முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை டிச.28க்குள் கேட்டு பெறவும்  அதன் பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். வேலையில் பொறுமை, நிதானம் தேவை. டிச.20,21,22ல் சிறப்பான பலன்களை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். குடும்ப பிரச்னையை வியாபாரத்தில் காட்டாமல் பாடுபட்டால் நல்ல வளர்ச்சி காணலாம். கடந்த மாதம் சூரியனால் பெண்கள் இருந்த பிரச்னை மறையும். ஆனால் போட்டியாளர்களால் பிரச்னை தலைதூக்கலாம். ஜன.7,8,9ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். டிச.25,26,29,30ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். டிச.29க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர்  பயணம் ஏற்படலாம். முக்கிய விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க அனுபவசாலிகளின் வசம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான வாழ்வு காண்பர். கேதுவால் புதிய பதவி தேடி வரும். ஜன.5,6ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். அதே நேரம் டிச.29க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது.

விவசாயிகளுக்கு வருமானத் திற்கு குறைவிருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவைகளில் மகசூல் அதிகரிக்கும். வழக்கு,
விவகாரங்களில் முடிவு திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.  

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர்.   கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கன்னியருக்கு திருமணம் பற்றிய பேச்சில் டிச.28க்குள் நல்ல முடிவு கிடைக்கும். டிச.31, ஜன.1ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஜன.10,11ல் உற்சாகம் மேலோங்கும்.
சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். டிச.29க்கு பிறகு  வேலையில் பொறுமை தேவைப்படும்.

* நல்ல நாள்: டிச.20, 21, 22, 23, 24, 27, 28, 31, ஜன.1, 7, 8, 9, 10, 11
* கவன நாள்: டிச.16, 17, ஜன.12, 13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்கள்: 5, 6  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு  தீபம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● கார்த்திகையன்று முருகனுக்கு அபிஷேகம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar