Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: ( சித்திரை 3,4, சுவாதி, விசாகம் ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ஆன்மிக சுற்றுலா தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) சுக்கிரனால் நன்மை
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) சுக்கிரனால் நன்மை

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:12

இந்த மாதம் சுக்கிரன் ஜன.1ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நற்பலன் கிடைக்கும். மேலும் 3-ம் இடத்தில் உள்ள கேது தொடர்ந்து நன்மையளிப்பார். புதன் டிச.29ல் தனுசுவிற்கு சென்றாலும் அவரால் நன்மை தர இயலாது. அதே போல் 2ம் இடத்தில் இருக்கும் சூரியன், சனி, 1-ம் இடத்தில் இருக்கும் குரு, 4-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய், 9-ம் இடத்தில் இருக்கும் ராகு ஆகியோரால் நன்மை தர இயலாது.  

புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் குடும்பத்தில் சிற்சில பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு குறுக்கிடலாம். ஜன.1க்கு பிறகு சுக்கிரனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சகோதரிகள்  உறுதுணையாக செயல்படுவர்.  குறிப்பாக  ஜன.2,3,4ல் அவர்களால் நன்மையை எதிர்பார்க்கலாம்.  டிச.29,30ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். ஆனால் ஜன.10,11ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  

பணியாளர்களுக்கு பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு இருப்பிட மாற்றமும் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.  டிச.27,28 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். டிச.28க்கு பிறகு முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவர். ஜன.1க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.  
கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். சூரியனால் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வாடிக்கையாளரின் தேவையறிந்து செயல்படுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். டிச.31, ஜன.1,5,6 ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.18,19,ஜன.14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.  

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜன.1க்கு பிறகு மறையும். அதன் பிறகு சுக்கிரனின் பலத்தால் புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது  போட்டிகளில்  வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு தேவைப்படும் பணப்பயிர்களைத் தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்கள் குடும்பத்தினருடன் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஜன.1க்கு பிறகு சுக்கிரனால் நன்மை மேலோங்கும்.  உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.  சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். டிச.20,21,22 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என அடிக்கடி செல்வர். சகோதரர் வழியில் பணஉதவி கிடைக்கும். ஜன.7,8,9ல் ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.. பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு இருக்காது.

ஆனால் கண் தொடர்பான பிரச்னை வரலாம்.  செவ்வாயால்  தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். பயணத்தின் போது சற்று விழிப்புடன் இருக்கவும்.  

* நல்ல நாள்: டிச.18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30, ஜன.2, 3, 4, 7, 8, 9, 14
* கவன நாள்: டிச.23, 24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5, 6
* நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்:

●  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar