Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவள்ளி மருதமலை கோவிலுக்கு தேவை பயோ ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) மகிழ்ச்சி ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆடம்பர வசதி
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆடம்பர வசதி

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
02:01

இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து நற்பலனைக் கொடுப்பார். அதே போல சுக்கிரன் ஜன.30ல் 9-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். பெண்கள்  ஆதரவுடன் செயல்படுவர். பொருளாதார வளம் பெருகும். புதன் ஜன.15,16ல் 9-ம் இடத்தில் இருப்பதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஜன.17ல் 10-ம் இடத்திற்கு செல்வதால் பிரச்னை அனைத்தும் மறையும்.

புதனால் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சேமிக்கும் விதத்தில் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பிப்.6,7ல் அவர்களால் நன்மை கிடைக்கும் ஆனால் ஜன.21,22ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கியிருக்கவும். ஜன.15,16,பிப்.11,12ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். பணியாளர்கள் இந்தமாதம் சூரியன், புதனால் நற்பலன் கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். சக ஊழியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். பிப்.3,4,5ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பகைவர்சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ஜன.17,18, பிப்.8,9ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜன.25,26ல் பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் வரலாம். சனிபகவானால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். ஆனால் சனியின் 10-ம் இடத்துப் பார்வையால் வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று பொருளாதார வளம் காண்பர். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, முயற்சியில் இருந்த தடைமறையும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். தொண்டர்களின் மத்தியில் நற்பெயர் உருவாகும். ஜன.23,24ல் சற்று  மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேண்டாத நண்பர்களால் படிப்பை பாழாக்கியவர்கள் ஜன.16க்கு பிறகு அதில் இருந்து விடுபடுவர். புதனின் பலத்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை  மூலம் நல்ல மகசூல் காண்பர். கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் காண்பர்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் ஜன.16 வரை பணிபளுவை சுமக்க வேண்டியதிருக்கும். அதன் பின் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.  ஜன.27,28,29ல் குதூகலமான பலன் பெறுவர்.  சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். ஜன.19,20ல் விருந்து, விழாவில் பங்கேற்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். கேதுவால் அக்கம்பக்கத்தினரின் தொல்லை ஏற்படலாம். உடல்நிலை சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.  

* நல்ல நாள்: ஜன.15, 16, 19, 20, 25, 26,27,28,29,பிப்.3,4,5,6,7,11,12
* கவன நாள்: ஜன. 30,31 சந்திராஷ்டம்.
* அதிர்ஷ்டஎண்: 1,9
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்
●  ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் வழிபாடு
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar