அசாம் மாநிலம் கோல்பரா அருகே சூர்யபஹார் மலையில் சூரியக்கோயில் உள்ளது. இது வட்ட வடிவ மாளிகை போல் இருக்கும். புராணங்களில் கூறியுள்ளபடி சூரியனுக்குரிய 12 சித்திரங்களும், அவற்றின் நடுவில் அவரது தந்தை காஷ்யப முனிவரின் சித்திரமும் வரையப்பட்டுள்ளது . ஒவ்வொரு சூரியனின் கையிலும் இரு ஆயுதங்கள் உள்ளன. தொல்லியல் துறையின் கீழ் இக்கோயில் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து 2,579 கி.மீ.