Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் ... சபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு சபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்
எழுத்தின் அளவு:
காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

சிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் பொங்கல் வைத்தனர்.

வலையராதினிப்பட்டி முத்தரையர் சமூகத்தினர், விஷ்ணு, ராமன், சிவன் என, மூன்று பிரிவினராக உள்ளனர். விஷ்ணு, ராமன் பிரிவினர் பொன்னழகி அம்மன், சிவன் பிரிவினர் பஞ்சநாட்சி அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள், மாட்டு பொங்கலை, இறைவன் அனுமதி கிடைத்தால் மட்டுமே கொண்டாடுகின்றனர். இதற்காக மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பிரிவினரும் தலா, ஏழு குழிகள் தோண்டி, தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.ஊருக்கு வெளியே, காட்டுப்பகுதியில் இருக்கும் அவரவருக்கான மாட்டு தொழுவத்தில் மண் பிடி கொடுத்ததும், விழா துவங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு, ஜன., 3ல் விழா துவங்கியது. 14 நாட்களும் இரவில் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்கினர்; வீட்டிற்கு செல்லவில்லை. பெண்கள் வீட்டில் விரதம் இருந்தனர். கை வளையல் உட்பட, எந்த அணிகலனும் அணியவில்லை. நேற்று, மூன்று பிரிவினரும் அவரவருக்கு பாத்தியப்பட்ட தொழுவத்தில் பொங்கல் வைத்தனர்.விஷ்ணு பிரிவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், மண் பானையில் வெண் பொங்கல் வைத்தனர். சிவன் பிரிவில் வண்ண ஆடைகள் அணிந்தனர். பொங்கல் வைத்ததும், அதனுடன் காய்கறி, பயறு வகைகளை கலந்து, 21 தலைவாழை இலையில் படையல் வைத்து வழிபட்டனர். புதிதாக பிறந்த கன்றுக்குட்டிகளுக்கு காதறுப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாடுகளுக்கு துண்டு கட்டி, அவிழ்த்து விட்டனர். படையல் உணவை, திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர்.

ஆர்.மேகலா கூறியதாவது: விரதம் இருக்கும் நாட்களில், ஆடம்பரமாக இருக்க மாட்டோம். குழம்பை தாளிக்க மாட்டோம். பொன்னழகி அம்மனுக்கு வெள்ளை உடை தான் அணிவிப்போம். அதனால், நாங்களும் வெள்ளை சேலை அணிகிறோம். குழந்தை வரம் கேட்டு, வெளியூர்களில் இருந்து, ஏராளமானோர் வருவர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த கரும்பை ஏலம் விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார். ஏ.போஸ் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக, பொங்கலை கோவில் விழா போன்று சிறப்பாக கொண்டாடுகிறோம். நாங்கள் கடந்த காலங்களில், முயல், கவுதாரி போன்றவற்றை வேட்டையாடினோம். அவற்றுக்கு படைக்கும் வகையில் காட்டுக்குள் பொங்கல் வைக்கிறோம். மூன்று கிளையினருக்கும் தனித்தனி சாமியாடி உள்ளனர். அவர்களது பானை தான் முதலில் பொங்கும். இந்த ஆண்டு சில காரணங்களால் ராமர் கிளையினர், பொங்கல் வைக்கவில்லை. அவர்களும், வெள்ளை சேலை உடுத்தி தான் பொங்கல் வைப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீராமச்சந்திர ... மேலும்
 
temple news
லக்னோ: ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்,; ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் ஸ்ரீ சீரடி சாயி பிருந்தாவனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மொழையூர் கிராமத்தில் ஶ்ரீராம நவமியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் சிதா ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.தமிழகம் வந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar