பதிவு செய்த நாள்
01
ஏப்
2019
11:04
திருப்பதி: திருமலையில், நாளை, ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளதை முன்னிட்டு, ஏழுமலையான் தரிசனம், ஐந்து மணி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில், வரும், 6ல், தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, ஆஸ்தானம் நடக்க உள்ளது. இதையடுத்து, நாளை, ஏழுமலையான் கோவில் கருவறை முதல், மகாதுவாரம் வரை, சுத்தம் செய்யப்பட உள்ளது.இதை முன்னிட்டு, நாளை காலை, 6:00 முதல், 11:00 மணி வரை, ஐந்து மணி நேரத்துக்கு, ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. அன்று காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும்.கோவிலை சுத்தப்படுத்தி, ஏழுமலையானுக்கு முறையாக பூஜைகள் செய்த பின், பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.