Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூலை 1 முதல் காஞ்சி அத்திவரதரை தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
ஜூலை 1 முதல் காஞ்சி அத்திவரதரை தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
11:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1 முதல் 48 நாட்களுக்கு நடக்கிறது. காஞ்சிவரதராஜப் பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மூலவரான வரதராஜப் பெருமாள் பெருந்தேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். வேகவதி ஆறு, அனந்த புஷ்கரணி ஆகியவை தீர்த்தங்களாக உள்ளன.

இந்த அனந்த புஷ்கரணியில் தான் அத்திவரதர் சயனித்தபடி அருள்பாலிக்கிறார். ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி எனவும்அழைக்கப்படுகிறது. தங்க பல்லி தரிசனம் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.அனந்த புஷ்கரணிஅத்தி வரதர்அத்தி வரதப் பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துஉள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.இப்போது கோவில் இருக்குமிடம் ஒரு காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த மலையாக இருந்தது. அங்கு பிரம்மன் யாகம் செய்தபோது அதிலிருந்து அத்தி வரதர் தோன்றினார். அவரை பிரம்மன் பூஜித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவரது கனவில் வந்த அத்தி வரதர் யாக குண்டத்திலிருந்து வந்ததால் தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும் தன்னை நிரந்தரமாக புஷ்கரணியில் எழுந்தருளச் செய்யும்படியும் கூறியுள்ளார்.

புஷ்கரணியில் எழுந்தருளச் செய்தால் மூலவராக யாரை தரிசிப்பது என்று அர்ச்சகர் வினவ பழைய சீவரத்தில் உள்ள வரதரை பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 ஆண்டிற்கு ஒருமுறை வெளிக் கொண்டு வந்து ஒரு மண்டல காலம் பூஜிக்கும் படியும் கட்டளையிட்டாராம்.அதன்படியே அத்தி வரதரை தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் கூறப்படுகிறது.பெருமாள் எழுந்தருளியுள்ள அனந்த புஷ்கரணி எப்போதும் வற்றியதில்லை.வெள்ளையருக்கு பயந்துமேலும் வெள்ளையர்கள் ஆட்சியில் கோவில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்கு கடத்திச் சென்ற நிலையில் அத்தி வரதர் சிலையையும் நாடு கடத்தி விடுவார்களோ என்று பயத்தில் அப்போது இதை ஆராதித்து வந்தவர்கள் பூமிக்கடியில் புதைத்திருந்தனர்.பிற்காலத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள்.

அவருக்கு அதே இடத்தில் மண்டபம் கட்டி பூஜித்ததாகவும் கூறப்படுகிறது.அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டனர்.நாற்பது ஆண்டிற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும் மீண்டும் அவரை தண்ணீருக்குள் வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வழக்கம் தொடர்கிறது.வாழ்க்கையில் ஒருமுறைஒவ்வொருவரும் அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது இருமுறைதான் அத்தி வரதரை தரிசிக்க முடியும். கடந்த 1854, 1892, 1937, 1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதர் தரிசன உற்சவம் நடந்தது.இந்த நுாற்றாண்டில் இந்தாண்டில் முதன் முறையாக ஜூலை 1ம் தேதி அனந்த தீர்த்தத்தில் இருந்து வெளியே வருகிறார். அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கின்றனர்.முதலில்சில நாட்கள்சயனக் கோலத்திலும்,பின் சில நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் அருள்பாலிக்க உள்ளார்.பக்தர்கள் வருகையை எதிர்கொள்ள காஞ்சிபுரத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar