ராமேஸ்வரம் : சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ல் இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஜூலை 16 இரவு 1:33 முதல் அதிகாலை 4:32 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுவதால், ராமேஸ் வரம் கோயிலில் ஜூலை 16 இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்படும் (வழக்கமாக இரவு 8:30க்கு நடை சாத்தல்). பின் அன்றிரவு 3:02 மணிக்கு அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடக்கும். பின் ஜூலை 17 அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிரகணாபிஷேகமும், தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தாள் பூஜைகள் நடக்கிறது, என இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.