Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குதூகலம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெருமை
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெருமை

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
04:07

இந்த மாதம் சுக்கிரனால் பெருமையுடன் வாழ்வீர்கள். தற்போது செவ்வாய் கடக ராசியில் இருக்கிறார். அவர் ஆக.10ல் சிம்ம ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெண்கள் வகையில் பெருமை காண்பீர்கள். பணஉதவி கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 24க்கு பிறகு அவரால் பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு, மரியாதை உயரும். செவ்வாயால் ஆக.10க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி காணலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஜூலை 25,26ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.5,6ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும்.  ஆக.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நிலையில் இருப்பர். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு  பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக.2க்கு பிறகு இடமாற்ற பீதி மறையும். வேலைப்பளு குறையும். ஆக.22,23,24ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.  நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு  அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.  ஜூலை 24க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.10க்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ஜூலை 27,28,31,ஆக.1,2ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆக.9,10ல் பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்கும் நிலை வரலாம்.

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஜூலை24க்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. ஆக.10க்கு பிறகு புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.  புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க பெறலாம்.

ஆக.10க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உங்களால்
குடும்பம் சிறந்து விளங்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆக.  11,12,13 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். உடல்நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: ஜூலை 22,23,24,25,26,29,30,ஆக.3,4,9,10,11,12,13
* கவன நாள்: ஜூலை 17,18,19 ஆக. 14,15   சந்திராஷ்டமம்-
* அதிர்ஷ்ட எண்: 4,5
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
●  வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
●  கார்த்திகையன்று முருகனுக்கு பாலபிஷேகம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar