Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முன்னேற்றம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
04:07

இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23 வரையும், புதன் ஆக.2 வரையும் நற்பலனை தருவார்கள். அதன் பிறகு முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்.  செவ்வாய் ஆக.3ல் கடகத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்தாலும் நன்மை  பெற முடியாது. சூரியன், கேது,குரு,சனி நன்மை தர இயலாதவராக இருக்கிறார்கள்.

சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். குடும்ப பெரியோர்களால் நன்மை கிடைக்கும். எனவே முக்கிய முடிவுகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு சகோதரிகள் பின்னணியாக இருப்பர். ஆக.3,4ல் அவர்கள் உறுதுணையாக இருப்பர். ஜூலை 29,30ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக. 9,10ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக.7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்கள் சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.2க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம். வேலையில் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் சிலர்  இடமாற்றத்தை சந்திப்பர். வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். சம்பள உயர்வு கிடைப்பதில் தடை இருக்காது. ஜூலை 27,28ல் சிறப்பான நாட்களாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதனால் ஆக.2 வரை பொருளாதார வளம் மேம்படும். முயற்சி வெற்றி அடையும். அதன் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். ஜூலை17,18,19 ஆக.14,15ல் திடீர் பணவரவு இருக்கும். ஜூலை 31,ஆக.1,2,5,6ல் சந்திரனால் தடைகள் வரலாம். சனிபகவானால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். கலைஞர்களுக்கு  எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். ஜூலை 24க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். ஆனால் கவுரவத்திற்கு பங்கம் வராது. ஆக.11,12,13 ல் வீண்மன உளைச்சல் ஏற்படலாம். மாணவர்கள் புதனால் போட்டிகளில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.  

ஆக.2க்கு பிறகு கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும்.  விவசாயிகள் சீரான மகசூல் கிடைக்கப் பெறுவர். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு நற்பலன் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கண்டு நெகிழ்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். ஆக.7,8ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்  பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஜூலை 20,21, ஆக.16,17 சிறப்பான நாளாக அமையும்.  உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 20, 21,27,28,29,30 ஆக. 3,4,7,8,14,15,16,17
கவன நாள்: ஜூலை 22, 23, 24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டஎண்: 4,8
* நிறம்: பச்சை,நீலம்

* பரிகாரம்:

●  காலையில் சூரிய நமஸ்காரம்
●  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை
●  தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar