Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ... அலங்காநல்லுார் அருகே தேவசேரி காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா அலங்காநல்லுார் அருகே தேவசேரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனதை தூய்மைப்படுத்தும் வள்ளலார் கோயில்
எழுத்தின் அளவு:
மனதை தூய்மைப்படுத்தும் வள்ளலார் கோயில்

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:08

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்  பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் ‘வாழ்வின் ஒளி’ வள்ளலார் சிதம்பரம் ராமலிங்கம்  படம் வைத்து அருட்பா பஜனை செய்து துவங்கப்பட்டது. சத்தியஞான சபையால்  2009ல் வள்ளலாருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரு ங்கருணை வடிவில் தீபம் ஒளி வீசிக்கொண்டு இருப்பதே தனிச்சிறப்பு.

இயற்கையின் நடுவே அமைந்த இந்த கோயிலில், சிந்தனைகளை ஒன்றாக்கி தியானம்  செய்து ஒளியை பார்க்கும்போது, கனத்த மனமும் கரைந்து லேசாகி, மனது தூய்மைப் படுகிறது. யாருக்கும் தீமை செய்யாது அன்பே சிவம் என்ற ஆனந்த அலை உணர்வுகளின் வெளி ப்பாடாகிறது என அங்கு தியானம் செய்யும் பலரும் ஒரேகுரலில் கூறுகின்றனர்.

‘அன்பை மட்டும் விதைத்தால் ஆனந்தத்தை அறுவடை செய்யலாம்’ என்ற சொல்லாட லுக்கு ஏற்ப தினமும் நூறு பேருக்கு அன்னதானம் நடந்து வருகிறது. தினமும் காலை,  மாலையில் மூன்று நேரம் பூஜை நடக்கிறது. அக். 5ம் தேதி வள்ளலார் பிறந்தநாளில்  அவரது படத்துடன் வீதி உலாவும், வடுகபட்டி பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  நிதி உதவி, நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தைப்பூசத்திருவிழாவில் ஜோதிதரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானமும்,  மாதம் தோறும் பூசநட்சத்திரத்தில் காலை, மாலையில் அகவல் பாராயணம், ஜோதி  வழிபாடு, மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று சொற்பொழிவும் நடக்கிறது. கோயிலுக்கு அருகே கட்டப்பட்ட தியான மண்டபம் திறக்கப்பட உள்ளது. நன்கொடையாளர்கள்  நிதி கொடுத்து உதவுகின்றனர். ஏற்பாடுகளை வள்ளலார் குழுத்தலைவராக முருகேசன், செயலாளர் வீரபத்திரன், பொருளர் வாசுமணி, கல்வி மற்றும் கட்டடக்குழு அறக்கட்டளை தலைவர் நல்லாசிரியர்  வைகுண்டம், பூஜாரி சோமநாதன் உட்பட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர். தொடர்புக்கு: 99947 77143

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar