Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணியில் ஆதவன் வழிபாடு! கோயில்களில் தீர்த்த உற்ஸவம் நடத்துவது ஏன்? கோயில்களில் தீர்த்த உற்ஸவம் ...
முதல் பக்கம் » துளிகள்
பலன் தரும் சூரிய காயத்ரி!
எழுத்தின் அளவு:
பலன் தரும் சூரிய காயத்ரி!

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
10:08

’ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதயுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்’:

மேலும் சூரிய பகவானை அவரது அருளாசி நிறைந்த திருத்தலங்களுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பர்.

சூரிய பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன.  அவற்றுள் சில:

கும்பகோணம் அருகில் ஆடுதுறை வழியில் அமைந்திருக்கும் சூரியனார்கோயில்
சிவசூரியன், திருவாரூர் அருகே செதலபதி (திலதர்ப்பணப்புரி) திருத்தலத்திலுள்ள சூரிய பகவான், தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள திருக்கண்டியூர்  தலத்தில், கண்டீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதியிலுள்ள மண்டபத்தில் மேற்கு திசை  நோக்கி சுமார் ஆறடி உயரத்தில் எழுந்தருளியுள்ள கல்ப சூரியன் ஆகியோர்  புகழ்பெற்றுத் திகழ்கிறார்கள்.

அது என்ன கல்ப சூரியன்?

திருக்கண்டியூரில் எழுந்தருளியுள்ள கல்பசூரியன் விக்ரகம் ஏழு மன்வந்த்ரங்களுக்கு  முற்பட்டதாம்.

யுகங்கள் நான்கு அவை: கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பவைய õகும். இந்த நான்கு யுகங்களையும் சேர்த்தால் ஒரு சதுர்யுகம் எனப்படும். அதாவது 43  லட்சத்து 20 ஆயிரம் வருடங்கள். இதைப்போல 71 சதுர்யுகங்கள் சேர்ந்தால் ஒரு  மன்வந்த்ரம் எனப்படும். அதாவது 30 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் வருடங்கள்.  இதைப்போல் 14 மன்வந்த்ரங்கள் சேர்ந்தால் ஒரு கல்பம் எனப்படுகிறது. அதாவது ஒரு  கல்பம் என்பது 429 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகள்.

திருக்கண்டியூரில் உள்ள கோயில் நம் மன்னர்கள் காலத்தில் எழுந்தது என்றாலும், இங்கு  அருள்பாலிக்கும் கல்பசூரியன். ஏழு மன்வந்த்ரங்களுக்கு முற்பட்டதாம். அதாவது 214 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஏனெனில் நாம்  கடந்துகொண்டிருப்பது ஏழாவது மன்வந்த்ரத்தைதான்.

மேலும், சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்களும், சூரிய புஷ்க ரணி  உள்ள கோயில்களும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் போற்றப்படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருமங்கலக்குடி, தஞ்சை -பட்டுக்கோட்டை  சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள பருதியப்பர் கோயில் எனப்படும் பரிதிநியமம் திருத்தலம், பழனி ஆடிவாரத்திலுள்ள திரு ஆவினன்குடி, மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர், சிவகங்கையிலிருந்து சுமார் 33 கிலோ மீட்டர்  தூரத்திலுள்ள திருவாடானை, தஞ்சை - திருவையாறுக்கு அருகேயுள்ள திருச்சோற்றுத்துறை ஆகிய திருத்தலங்கள் சூரியன் தேவ வடிவில வழிபட்ட  தலங்களாகும்.

இதேபோல சூரியன் தன் ஒளிக்கதிர்களால் சிவலிங்கத்தை வழிபட்ட கோயில்களும்  தமிழகத்தில் உள்ளன. அவை: கும்பகோணத்திற்கு அருகே திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள நாகேஸ்வர சுவாமியை சித்திரை 11, 12, 13 தேதிகளிலும்,  காரைக்கால் அருகேயுள்ள கோயிற் பத்து தலத்தில் இறைவன் பார்வதீஸ்வரரை பங்குனி  13 முதல் பத்து நாட்களும்; திருவாரூருக்கு தெற்கேயுள்ள திருநெல்லிக்கா திருத்தலத்தில்அருள்புரியும் இறைவன் நெல்லிவனநாதரை ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசிமுதல் ஏழு நாட்கள் மற்றும் மாசி மாதம் 18-ஆம் தேதி முதல் ஏழு நாட்களும்; விழுப்புரம் அருகேயுள்ள  பனையபுரம் எனப்படும் புறவார்பனங்காட்டூர் தலத்தில் அருள்புரியும்  பனங்காட்டீஸ்வரரை சித்திரை முதல் தேதியிலிருந்து 7-ஆம் தேதிவரையிலும்;  தஞ்சைக்கு அருகே கண்டியூர் தலத்தில் எழுந்தருளியுள்ள வீரட்டேஸ்வரரை மாசி 13,  14, 15 தேதிகளிலும்; திருமீயச்சூர் இறைவன் மேகநாதரை சித்திரை 21 முதல் ஏழு  நாட்களும்; சீர்காழி அருகிலுள்ள மகேந்திரபள்ளி தலத்தில் அருள்புரியும் திருமேனிய ழகர் சுவாமியை பங்குனி முதல் நாளிலிருந்து ஏழு நாட்கள் வரையிலும் சூரியன் தன்  ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரவிட்டு வழிபடுகிறான். மேலும் குடந்தை அரு கிலுள்ள இன்னாம்பூர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலும் சூரியன் தன்  ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுகிறான்.

தமிழகத்தில் சூரிய பகவானுக்கு கோயில்களில் விக்கிரகங்கள் இருப்பதுபோல்  வடநாட்டில் பல இடங்களில் சூரியனுக்கென்றே கோயில்கள் உள்ளன.

பீகார் மாநிலத்தில் கயா திருத்தலத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலை ’தக்ஷிணார்கர்’  என்பர். மகாவிஷ்ணுவின் பாதங்கள் அமைந்துள்ள விஷ்ணு பாதக்கோயிலுக்கு அருகில்,  கிழக்கு நோக்கியுள்ள கோயில் சூரிய பகவான் மார்பில் வெள்ளிக்கவசம் விளங்க, இடு ப்பில் ஒட்டியாணத்துடன் நீளமான காலணிகள் அணிந்து அழகாகக் காட்சி தருகிறார்.  மேலும், கயாவிலும், கயாவைச் சுற்றிலும் சூரியனுக்கு பல கோயில்கள் உள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் ஜான்ஸிக்கு அருகிலுள்ள திருத்தலம் ’உனாவ்’. இங்கு சூரிய னுக்கென்று தனிக்கோயில் உள்ளது. சூரியனின் சிலாரூபத்திற்கு வெள்ளிக்கவசம்  சாற்றியிருக்கிறார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்பாரா என்ற ஊருக்கு அருகிலுள்ள ’சூர்ய பஹார்’ என்ற  குன்றில் சூரியன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வட்டவடிவ கல்மேடையில்  பன்னிரண்டு சூரியர்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களின் பெயர்கள்; ஆதித்தன்,  அம்சுமான், சவிதா, பானு, பாஸ்கரன், திவாகரன், அர்க்கன், மார்த்தாண்டன், அர்யமா,  மித்திரன், விஸ்வான், பர்ஜன்யன்.

இதேபோல் சூரியனுக்கு ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், லோகரட்சகன், கர்த்தா,  திரிலோகேசன், ஹர்த்தா, தமிஸாஹன், தபனஸ், சசி, தாபனர், சப்தஸ்வரவாஹனன்,  சர்வதேவன் என்று பல பெயர்கள் உள்ளதாக சூரிய புராணம் கூறுகிறது.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் திருத்தலம் அருகில் அரசவல்லி சூரியநாராயணசாயி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐந்தடி உயரத்துடன், கையில் தாமரை மொட்டு வைத்தபடி  உஷா - சாயா தேவியர்களுடன் காட்சி தரும் சூரியனுக்கு பத்மபாணி என்று பெயர்.

காஷ்மீரிலுள்ள மார்த்தாண்டம் சூரியன் கோயில், ஓடிசாவில் பூரி என்னுமிடத்திலுள்ள கோனார்க் சூரியன்கோயில், குஜராத் மாநிலம் மோதேரா சூரியன்கோயில் ஆகியவை  மிகவும் புகழ்பெற்றவையாகும். தவிர, பாகிஸ்தானின் மூல்தான் நகரிலிருந்த சூரியன்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தை  ஆண்ட மன்னனால் கட்டப்பட்டது. இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோயில்  என்று வரலாறு கூறுகிறது. இது ஓளரங்கசீப் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாறு  கூறுகிறது.

இந்தியாவில் பல இடங்களில் சூரியன் கோயில்கள் இருப்பதுபோல் உலகில் சில இட ங்களிலும் கோயில்கள் உள்ளன. குறிப்பாக பாரசீகத்திலும், தென் அமெரிக்காவிலும்  சூரியனுக்கு கோயில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சூரிய பகவானை உத்ராயன புண்ணிய காலமான தை மாதம் முதல் தேதி வழிபடுவது போல, தட்சிணாயன மாதமான ஆவணியிலும் சூரியன் எழுந்தருளியுள்ள கோயில்களில்  சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில்  விரதமிருந்து சூரியனை வழிபட சகலபாக்கியங்கள் பெற்று வளமுடன் வாழலாம் என்று  சொல்லப்படுகிறது.

சூரிய பகவான் அருள்புரியும் கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில், அருகிலுள்ளசிவன்கோயிலிற்குச் சென்று சிவபெருமானை (சிவலிங்கம்) வழிபடலாம். ஏனெனில் சிவபெருமானின் வலது கண், சூரிய அம்சம் நிறைந்தது என்று புராணம் கூறுகிறது. அதேபோல் இடது கண், சந்திரனின் அம்சம் கொண்டது எனப்படுகிறது. சூரியனின்  அதிதேவதை சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆவணி ஞாயிறு அம்மனுக்குரிய நாளாகவும் கருதப்படுவதால், அன்று  அம்பாளையும் வழிபட்டுப் பேறுகள் பெற்று வளமுடன் வாழலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar