திண்டுக்கல் : திண்டுக்கல் விநாயகர் கோயில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால், தயிர், வெண்ணை, இளநீர் உட்பட 16 வகையான அபிேஷகங்கள் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளை விநாயகர் கோயிலில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.