நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கும் நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.