தன் கணவர் குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தார் என்பதை அறிய ருக்மணி ஆசைப்பட் டாள். அதனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு சிலை செய்தாள். அச்சிலையே உடுப்பியில் இன்று வழிபாட்டில் உள்ளது. மத்வாச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ளது. இக்கோயிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. குழந்தை வடிவில் சுவாமி காட்சி தருகிறார். வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியுள்ளார். ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழிமட்டும் உண்டு. கருவறையின் நுழைவுவாயில் விஜயதசமியன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்.