பதிவு செய்த நாள்
17
செப்
2019
04:09
* செப்.14, ஆவணி 28: திருக்குறுங்குடி நம்பி சன்னதியில் உறியடி உற்ஸவம், திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனிபகவான் ஆராதனை, கரிநாள்
* செப்.15, ஆவணி 29: மகாளய பட்சம் ஆரம்பம், ஆவணி கடைசி ஞாயிறு விரதம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
* செப்.16, ஆவணி 30: முகூர்த்த நாள், பிரகதி கவுரி விரதம், தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு
* செப்.17, ஆவணி 31: சடசீதி புண்ணிய காலம், வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, தேனி குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு
* செப்.18, புரட்டாசி 1: சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பரணி மகாளயம், மகாபரணி, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல், காஞ்சிபுரம் திருப்போரூர் முருகன் அபிஷேகம்
* செப்.19, புரட்டாசி 2: கார்த்திகை விரதம், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், திருத்தணி, சுவாமிமலை முருகன் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர்
* செப்.20, புரட்டாசி 3: திருநாளைப்போவார் குருபூஜை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி, சங்கரன் கோவில் கோமதி தங்கப் பாவாடை தரிசனம், திருவிடை மருதூர் பிரகத்குசாம்பிகை பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்.