Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரரர் கோவிலில் ரூ.88 லட்சம் ... சிதம்பரம் நடராஜர் ராஜசபையில் திருமணம்: தீட்சிதர்களிடம் விசாரணை சிதம்பரம் நடராஜர் ராஜசபையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு
எழுத்தின் அளவு:
அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:09

சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், குலசேகரப்பட்டினம், மேல்மலையனுார், திருவக்கரை ஆகிய, அம்மன் கோவில்களுக்கு, ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினம் விஜயதசமியை முன்னிட்டு, சென்னை, வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து, அக்., 4ம் தேதி இரவு, 8:00 மணிக்கு புறப்படும் சுற்றுலா வாகனம், மறுநாள் காலை, 6:00 மணிக்கு, திருச்செந்துார் சென்றடையும்.

காலை உணவுக்கு பின், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.பின், திருச்செந்துார் முருகன் கோவில் தரிசனம் முடித்து, மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு மதுரை வந்து சேரும். அங்கு, பயணியர், தமிழ்நாடு ஓட்டலில் தங்க வைக்கப்படுவர். மறுநாள், அழகர்கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால் பார்வையிடலாம். இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:00 மணிக்கு சென்னை வந்தடையும். சுற்றுலா கட்டணமாக, நபருக்கு, 5,400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேல்மலையனுார்: ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று, இந்த சுற்றுலா நடத்தப்படும். சென்னையில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, காலை, 11:00 மணிக்கு, மேல்மலையனுார் சென்றடையும். தரிசனம் முடித்து, மதியம், 2:00 மணிக்கு கிளம்பி, மாலை, 3:30 மணிக்கு, பயணியர் மேல்மருவத்துார் அழைத்து செல்லப்படுவர். அங்கு தரிசனம் முடித்து, இரவு, 7:00 மணிக்கு, சென்னை வரலாம். இதற்கான கட்டணம், நபருக்கு, 975 ரூபாய்.

திருவக்கரை: ஒவ்வொரு மாதம் பவுர்ணமி அன்று, சென்னை அலுவலகத்தில் இருந்து, காலை, 6:30 மணிக்கு புறப்படும் வாகனம், திருவக்கரை, வக்கரகாளி அம்மன் கோவிலுக்கு, காலை, 10:30 மணிக்கு சென்று சேரும். பகல், 12:30 மணிக்கு, மயிலம் முருகன் கோவில் தரிசனம் முடித்து, மதியம், 2:00 மணிக்கு, மேல்மருவத்துார் வந்தடையும், அங்கு தரிசனம் முடித்து, மாலை, 5:00 மணிக்கு சென்னை வரலாம். இதற்கான கட்டணம், தலா, 975 ரூபாய். இந்த ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவோர், www.ttdconline.com மற்றும் www.tamilnadutourism.org என்ற, இணையதளம் மற்றும், 044- - 2533 3333, 2533 3444, 2533 3850-54 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar